கருத்துமுரண்பாடுகள்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 25 oktober 2011
மலேசிய பைக் பந்தயத்தில் விபத்தில் இத்தாலி வீரர் பலி!
(வீடியோ இணைப்பு)
மலேசியாவில் நடந்த பைக் ரேஸ் விபத்தில் இத்தாலி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மலேசியாவின் செபாங்க் நகரில் மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் பைக் ரேஸ் நேற்று(ஞாயிறு) நடந்தது. உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்றனர். போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் அரங்கத்தில் கூடியிருந்தனர். 21 சுற்றுகள் கொண்ட இப்போட்டி விறுவிறுப்புடன் தொடங்கியது. வீரர்கள் அசுர வேகத்தில் பைக்கில் பறந்தனர்.
2ஆவது சுற்றின் போது, இத்தாலி வீரரான ஹோண்டா அணியின் சைமன்செல்லி, யமஹா அணியின் காலின் எட்வர்ட்ஸ், வலன்டினோ ரோஸி ஆகியோரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில், கீழே விழுந்த சைமன்செல்லி மீது பைக் ஏறி ஹெல்மட் உடைந்தது. தலை, கழுத்து பகுதியில் பலத்த காயமேற்பட்டது.
அதே போல், எட்வர்சும் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதை நேரில் பார்த்த ரசிகர்களும், டிவியில் ரேஸ் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக போட்டி ரத்து செய்யப்பட்டு, 2 வீரர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சைமன்செல்லி உயிரிழந்தார். எட்வர்ட்ஸ் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
24 வயதாகும் சைமன்செல்லி 2008ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இதற்கு முன், கடந்த 2003இல் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் ரேஸ் நடந்த போது, டைஜிரோ கடோவும், கடந்த ஆண்டு சோயா தோமிஜவாவும் விபத்தில் சிக்கிய பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
24 Oct 2011
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten