தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 oktober 2011

அவுஸ்திரேலியா அகதி முகாமில் மோதல்! இலங்கையர் உட்பட மூவர் காயம்

[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 06:43.50 AM GMT ]
வட அவுஸ்திரேலியா அகதிகள் முகாமொன்றில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு சபை தெரிவித்துள்ளது.
ளுஉhநசபநச அகதிகள் முகாமில் இடம்பெற்ற இந்த மோதலில் ஒரு காவலாளியும் இரு அகதிகளும் காயமடைந்தனர்
இதன்போது இலங்கை அகதி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது' எனினும் அவரின் பெயரை அறிந்துகொள்ள முடியவில்லை.
குறித்த இலங்கை அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அகதிகள் செயற்பாட்டாளர் இயன் ரின்டோல் தெரிவித்துள்ளார்.
மோதலை அடுத்து சுமார் 700 பேர்வரை தங்கியுள்ள இந்த முகாமில் பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முகாமில் பல இலங்கை அகதிகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பதிலுக்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றனர்;.

Geen opmerkingen:

Een reactie posten