[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 04:04.57 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவினார்கள் என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து தமிழருக்கு நெதர்லாந்து நீதிமன்றத்தினால் 2 முதல் 6 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியமை குண்டுத் தாக்குதல் கொலை என்பவற்றுக்கு துணைபோனமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மில்லியன் கணக்கிலான யுரோக்களை சேகரித்து வழங்கியமை தொடர்பிலும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொலைகள் இடம்பெறுவதற்கு இந்த சந்தேகநபர்கள் தமிழ் இளைஞர்களை ஊக்குவித்ததாக அரச தரப்பு சட்டத்தரணி நெதர்லாந்து நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால் கைதானவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் இந்த ஐந்து பேரும் மிக கொடுரமான இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசுக்கு எதிரான விடுதலைப் போராட்ட வீரர்கள் எனறு வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவர்கள் மீது பயங்கவாத குற்றங்களுக்காக தண்டனை விதிக்கவில்லை. ஆனால் கிரிமினல் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தமைக்காக தண்டனை வழங்குவதாகக் கூறினார்.
சுமார் 6 வாரங்களாக விசாரணை செய்யப்பட்டு வரும் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி செல்லையா என்பவருக்கு ஆறு வருடங்கள், அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களும்,
இராமலிங்கம் என்பவருக்கு ஐந்து வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும்,
இளவரசன் என்பவருக்கு மூன்று வருடங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களும்,
லிங்கம் என்பவருக்கு இரண்டு வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருடங்களும்,
மனோ என்பவருக்கு இரண்டரை வருடங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களும் தீர்க்கப்பட்டது,
மேலும் தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
இவர்கள் தீவிரவாத அமைப்பு இல்லை எனவும் நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுப் போட்டிகள் பாடசாலைகள் மற்றும் தேசிய நினைவு எழுச்சி நாள் ஆகிய அனைத்து நிகழ்வுகளும் தடையின்றி நடத்தலாம் எனவும் கூறப்பட்டது,
இது சம்பந்தமாக இவர்களின் இந்த தண்டனையையும் நீக்குமாறு கோரி இவர்களின் சட்டத்தரணிகள் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

Geen opmerkingen:
Een reactie posten