விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான திரு பொட்டு அம்மானுக்கு மிக நெருங்கியவரும் மற்றும் 2ம் நிலை வகிக்கக்கூடியவர் என சந்தேகிக்கப்படும் சிரஞ்சீவி மாஸ்டரை தமிழக கியூபிரிவு பொலிசார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அளவில் கைதுசெய்தனர். அதன் பின்னர் அவர் சிறையில் இருந்தவாறே ஜூனியர் விகடனுக்கு ஒரு செவ்வியையும் வழங்கியிருந்தார். இதன் மூலம் தமிழகத்தில் அவர் கைதானது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் தற்போது தமிழகத்தில் இல்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க அவரை கியூ பிரிவுப் பொலிசார் "ரா" உதவியுடன் இலங்கையிடம் கையளித்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
2009ம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்ற வேளைகளில் சிரஞ்சீவி மாஸ்டர் வன்னியில் இருந்தார். அவர் பின்னர் அங்கிருந்து தமிழகத்தில் வந்து தங்கியிருந்தார். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த கியூப் பிரிவு பொலிசார் அவரை கைதுசெதனர். பின்னர் அவரிடம் ரோ அதிகாரிகள் பல கட்ட விசாரணைகளை நடத்திவந்தனர். குறிப்பாக பொட்டம்மான் குறித்த விடையங்களை அவர்கள் சிரஞ்சீவி மாஸ்டரிடம் துருவித் துருவிக் கேட்டதாகவும் தகவல்கள் அப்போது வெளியாகியிருந்தது. இருப்பினும் அவர் தமிழகத்தில் சிறையில் இருக்கிறார் என்பதனை எல்லோரும் நம்பியிருந்தனர். ஆனால் இந்தியா மீண்டும் தனது வேலையக் காட்டிவிட்டது.
அவரை இலங்கை அரசிடம் ஒப்படைத்து பெரும் தூரோகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் அவரை இந்தியா இலங்கையிடம் கையளித்துள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து புறப்பட்டு கர்நாடகா செல்லவிருந்த இலங்கையின் வான்படை விமானம் ஒன்று இயந்திரக்கோளாறு காரணமாக மீனம்பாக்கத்தில் தரையிறங்கியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது மக்களுக்கு நினைவிருக்கலாம். அவ்விமானம் உண்மையாகவே இயந்திரக்கோளாறு காரணமாகத் தரையிறங்கியதா இல்லை இந்தியா கைதுசெது வைத்திருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலரை இரகசியமாக ஏற்றிச் செல்லவந்ததா என்பதே தற்போது நிலவும் பெருங் கேள்விக்குறியாக உள்ளது.
தமிழ் நாட்டில் கைதாகியிருக்கும் சில புலிகளின் முக்கிய நபர்களை இந்தியா எவ்வாறு கைதிப் பரிமாற்றம் செய்கிறது? அதாவது ஒரு கைதி சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும் வேளையில் அவருக்கு உயிர் ஆபத்து இருக்கிறது என்றால் அவரை இந்தியா போன்ற பாரிய ஜனநாயக நாடுகள் எவ்வாறு அனுப்பிவைக்கிறது என்ற கேள்விகளும் எழுகின்றன. ஐ.நா சாசனங்களையும் சர்வதேச சட்ட முறைகளையும் மீறி இலங்கைக்கு உதவிசெய்துவரும் இந்தியாவின் வாலைப் பிடித்துவரும் தமிழர்களுக்கு இனியாவது புத்திவருமா ? இல்லை இந்தியாவின் தலையீடு இல்லாமல் தீர்வு காணமுடியாது என்று அலட்டிக்கொண்டு திரியும் அரசியல் வாதிகளுக்கு இனியாவது அறிவுவருமா தெரியவில்லை.
இந்தியா இப்போது உணர்ந்துவிட்டது. புலிகள் அழிவால் சீனா இலங்கையில் காலூன்றிவிட்டது
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு கடுகளவேனும் மாற்றம் வரவில்லை என்பதனை எமது சமூகம் எப்போது அறியப்போகிறது. இந்தியாச் சிறையில் இருந்த சிரஞ்சீவி மாஸ்டரை காட்டச் சொன்னால் தற்போது கியூப் பிரிவால் அவரைக் காட்ட முடியுமா ?
பொட்டுஅம்மான்” சிரஞ்சீவி மாஸ்டருக்கு நடந்தது என்ன? ஜுனியர் விகடன் வெளியிடும் தகவல்கள்!
சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம்.
தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாகக் கேட்டு அதிர்ச்சியின் விளிம்புக்கே போனவர்கள், ”சிரஞ்சீவி மாஸ்டர், பொட்டு அம்மானின் பேரபிமானத்தைப் பெற்றவர். புலிகளின் தமிழகப் புலனாய்வுத் தலைவராக இருந்தார். இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அடிக்கடி விசிட் அடிப்பார். ஈழப் போர் தீவிரம் எடுத்த கால கட்டத்தில் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அழைப்பு வரஸ உடனடியாகக் கிளம்பிப் போனார். போரின் உக்கிரம் மிகக் கடுமையானபோது, தமிழகத்துக்கு வந்து அதன் பாதிப்புகளை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்லி, தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.
ஆனால், இந்திய � இலங்கை அரசுகளின் தீவிரக் கண்காணிப்புகளைத் தாண்டி, அவரால் இங்கே வந்து சேர முடியவில்லை. அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில்ஸ அவர் தமிழகத்தில் பிடிபட்டிருப்பதாகச் சொல்வது பெரிய விந்தைதான்!” என்கிறார்கள்.
இன்னும் சிலரோ, ”திருகோணமலையில் உள்ள பன்குளம் பகுதியில் பிறந்த சிரஞ்சீவி, 91-ம் ஆண்டு இயக்கத்தின் நம்பகத்தைப் பெற்று யாழ்ப்பாணம் பகுதியில் தீவிர ஆயுதப் பயிற்சி எடுத்தார். அதன் பிறகு புலிகளின் உளவுப் பிரிவுக்கு வந்தார். 98-ம் வருடம் கண்ணன் என்கிற கண்ணப்பனும், சிரஞ்சீவியும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அசம்பாவிதச் சம்பவங்களிலோ, ஆயுதக் கடத்தலிலோ ஈடுபடும் ‘அசைன்மென்ட்’ இவர்களுக்குக் கிடையாது. தமிழகத்தின் அரசியல் நிலைமைகளைக் கணித்துக் கொடுக்கும் பணி மட்டும்தான். அதைச் செவ்வனே செய்யக்கூடியவர் சிரஞ்சீவி. அதனாலேயே அவரை ‘தமிழ்நாட்டு பொட்டு அம்மான்’ என்பார்கள்.
ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த சீரஞ்சீவி, இங்கு உள்ள அரசியல் நிலவரங்களை ஊன்றி ஸ்டடி செய்த பிறகு, இங்கு இருந்தே ஆயுதப் பரிவர்த்தனைக்கான பொறுப்பையும்ஏற்றார். அப்போதுதான் தமிழக போலீஸ் அவர் மீது கண் வைத்தது. அவரை மடக்கினால், புலிகளின் உளவு நெட்வொர்க்குகளைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டுவிடலாம் எனத் திட்டமிட்டு அவரை வளைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், சாதுர்யமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.
இலங்கைத் தமிழர் என சந்தேகிக்க முடியாத அளவுக்கு சென்னைத் தமிழிலும் சரளமாகப் பேசுவார். 2004-ல் அவர் மறுபடி சென்னைக்கு வந்து சென்றபோது, பல திசைகளிலும் ரூட் போட்டு அவரை வளைக்கத் துடித்தது போலீஸ். அவர் மீது எந்த வழக்குகளும் அப்போது இல்லை என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 2007-ல் சிவகரன் என்கிற போராளி வெடிமருந்து கடத்தியதாகப் பதிவான வழக்கில் சிரஞ்சீவி மாஸ்டர் பெயரும் சேர்க்கப்பட்டது. அப்போது போட்ட வழக்கு ஒன்றை வைத்தே அதன் பிறகு அவரை வெளிப்படையாக போலீஸ் தேடத் தொடங்கியது.
தொண்டி வழியாக அவர் மீண்டும் சென்னைக்கு வரும் தகவலை அறிந்துகொண்ட உளவு போலீஸ், புலிகளின் அபிமானம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அரசியல் புள்ளியை வளைத்து, அவர் மூலமாக சிரஞ்சீவியை வளைக்கத் திட்டமிட்டது. ஆனால், கண்ணப்பன் என்ற போராளி மட்டும் சிக்க, போலீஸின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆனார் சிரஞ்சீவி.
தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளை ஈழத்துக்கே அழைத்துச் சென்றுஸ பிரபாகரன், பொட்டு அம்மான், தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் சிரஞ்சீவிதான். போர் உக்கிரமான காலத்திலேயே தமிழகத்து அரசியல் புள்ளி ஒருவரை ஈழத்துக்கு அழைத்துப்போய், குண்டு மழைகளுக்கு நடுவே வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டுவந்தார். கடைசிக் கட்ட ஈழப் போரில் பல்வேறு படை அணிகளாகப் பிரிந்து ஊடறுப்புத் தாக்குதல் நடத்தி வெளியேறியவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர் என எங்களுக்குத் தகவல் வந்ததே தவிர, தப்பித்த அவர் எங்கே இருக்கிறார் என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்கள்.
மேற்கொண்டு நாம் விசாரித்தபோது, ”ஒரு வாரத்துக்கு முன்னரே உளவுத்துறை போலீஸார் அவரை வளைத்துவிட்டதாகவும், புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து அவரிடம் துருவிக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. கூடவே, தமிழக அரசியல் தலைவர்களின் புலித் தொடர்புகள் குறித்தும், அவர்களைச் சிக்கவைக்கும் விதமான தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையின்போதே ‘புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்கலாம்’ எனச் சொன்ன போலீஸார், தற்போது சிரஞ்சீவியைச் சிக்கவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது!” என்று கூறுகிறார்கள் காவல் வட்டாரத்தின் அசைவுகளை அறிந்தவர்கள்.
இன்னும் சில போலீஸார், ”இலங்கையில் போர் தொடங்கியபோது புலிகள் பலரும் தமிழகத்துக்குள் ஊடுருவினார்கள். சென்னை மடிப்பாக்கம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பரமேஸ்வரன் என்பவரும் போராளிகளும் தங்கி இருந்தது தெரிந்து அவர்களை வளைத்தோம். அப்போது சிரஞ்சீவி மாஸ்டர் குறித்து பரமேஸ்வரன் சொன்ன தகவல்கள் படு பயங்கரமானவை. அப்போதே,
சிரஞ்சீவி குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டது எங்கள் துறை. போர்க்காலத்தில் அவர் ஈழத்தில் இருந்தார் என்ற தகவல் உறுதியானதாகத் தெரிகிறது. தற்போது சிக்கி இருக்கும் அவரிடம் பொட்டு அம்மான் குறித்து எங்கள் துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு லேசான புன்னகையை மட்டுமே சிரஞ்சீவி மாஸ்டர் பதிலாக்கியதாகவும் தெரிகிறது. ஈழத்தின் கடைசிக்கட்டப் போர்க் கொடூரங்களை மட்டும் மனம்விட்டுச் சொன்னவர், புலித் தலைவர்களின் நிலை குறித்த கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை!” என்றார்கள்.
தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட்டிடம், சிரஞ்சீவி கைது குறித்துக் கேட்டோம். ”விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவில் சிரஞ்சீவி மிக முக்கியமான ஆள். தீவிரமாகத் தேடப்பட்ட இவர், இலங்கைப் போருக்குப் பிறகு சந்திரகுமார் என்ற பெயரில் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு வெடி மருந்து கடத்தல் விவகாரத்தில் சிவா என்கிற சிவகரனுடன் சிரஞ்சீவி சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு இருக்கிறது. மற்றபடி இலங்கைப் போருக்குப் பிறகு தமிழகம் வந்த சிரஞ்சீவி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர் மீது புதிதாக வழக்குகள் ஏதும் இல்லை. மற்றபடி மேற்கொண்டும் அவரிடம் விசாரித்து வருகிறோம்!” என்றவரிடம்,
”விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பில் சிரஞ்சீவியைச் சிக்க வைக்க முயற்சிகள் நடப்ப தாகச் சொல்லப்படுகிறதே?” எனக் கேட்டோம். ”கிடையவே கிடையாது. விழுப்புரம் தண்ட வாளத் தகர்ப்பு விவகாரத்தில் சிரஞ்சீவிக்கு எவ்விதச் சம்பந்த மும் கிடையாது. தண்டவாளத் தகர்ப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக் கிறோம்!” என்றார்.
கை மற்றும் கால்களில் காயங்களோடு போலீஸ் விசாரணையில் இருக்கும் சிரஞ்சீவி புலிகள் குறித்தும்ஸ குறிப்பாக பொட்டு அம்மான் குறித்தும் என்ன சொல்லப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி!
‘பிரபாகரன் இருக்கிறாரா?’ என்ற உலகளாவிய கேள்விக்கும் அவரிடம்ஸ உறுதியான பதில் இருக்கலாம். |
Geen opmerkingen:
Een reactie posten