யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் உறவினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலசுப்பிரமணியம் பரந்தாமன் என்ற 23 வயது இளைஞர் கடந்த 05 - 10 - 2011 ( Tp 0774 645 337 )புதன்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்றபொழுது காணாமல் போயுள்ளார்.
இதேவேளை சுப்பிரமணியம் வாகீசன் என்ற 18 வயது இளைஞரும் 30 - 09 - 2011(Tp 0770 783 774 ) அன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி சென்றபொழுது காணாமல் போயுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இவ்வாறு இருக்க, யாழ்ப்பாணத்தில் தற்போதைய சூழ்நிலையில் காணாமல் போதல், கடத்தல், சுட்டுக்கொலைகள் என்பன நடைபெறுவதில்லை.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் காணாமல் போன 18 வயதுடையவருக்கு 14 வயது. இந் நிலையில் விடுதலைப்புலிகளின் தளபதிகளாக இருந்தவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக நீரோத்தில் விடுவித்த இராணுவம் ஏன் இவரைக் கடத்த வேண்டும்?
இந் நிலையில் இரு இளைஞர்கள் காணாமல் போயிருந்தால் அது பெரும் பரபரப்பையும், கேள்விகளையும் ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பல முறைகேடான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன், இதற்கு பின்னால் ஒரு ஊடகம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஊடகம் ஒன்றை வைத்து வெளிநாட்டுக்குச் செல்வதற்காகவே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த ஊடகம் தனது பதிப்பில் இது தொடர்பான செய்தியைப் பிரசுரிககாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து அவர்கள் ஊடாக இச் செய்தியைப் பிரிசுரம் செய்துள்ளது.
தற்போது ஊடகம் என்பது ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வரும் நிலையிலும், ஊடகத்தின் செய்தியைக் கொண்டு பலர் நன்மையடைவதும் யாழ்ப்பாணத்தில் பெருகி விட்டது.
அந்த வகையில்தான் அண்மையில் காதலுக்காக அடிவாங்கியவரை வெளிநாட்டுக்கு அரசியல் தஞ்சம் கோரி அனுப்பி வைத்தது ஒரு ஊடகம் என்பது நீங்கள் அறிந்த உண்மை.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் என்றபோதும், இவ் ஊடகம் அந்த ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் செயலை பணத்துக்காகச் செய்து முடித்துள்ளது.
அதாவது காணாமல் போனவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடப்படும்போது பத்திரிகைகள் செய்தி வெளியிடப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த முறைப்பாடு வலுப்பெறும்.
அதற்காக இப் பத்திரிகை தனது பதிப்பில் செய்தி பிரசுரிப்பதாகக் கூறி ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வேண்டி, தனது பதிப்பில் அச் செய்தியைத் தான் பிரசுரிக்காமல் புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவரும் ஊடகங்களுக்கே அனுப்பி வைத்துள்ளது.
அதேநேரம் வவுனியாவில் இருப்பவருக்கும் கிளிநொச்சியில் காணாமல் போனவருக்கும் ஏன் தீவகம் ஊர்காவற்றுறைப் பொலி்ஸ் நிலையத்தில் இது தொடர்பில் பதிவு செய்ய வேண்டும்?
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பிரதி 2003-2004 ஆம் ஆண்டு பதிப்புரிமை கொண்டமையும் கீழ்ப் பகுதியில் காண்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் காணாமல் போனது தொடர்பில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொழும்பில் இருப்பவரே முறைப்பாடு செய்துள்ளார்.
எனவே இக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு எமது செய்திப் பிரிவு மேற்படி காணாமல் போனவர் தொடர்பில் தெரிய வந்தால் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது,
முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இடையில் அத் தொலைபேசி துண்டிக்கப்பட்டு, மீண்டும் நாம் முயற்சி செய்தபோது அது செயலிழந்து காணப்பட்டது. அவர்கள் முதலில் எம்துடன் உரையாடிய ஒலி வடிவமும் எங்கள் செய்திப் பிரிவு வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் காணாமல் போன 23 வயதுடையவர் தொடர்பில் அறிவிக்குமாறு தெரிவித்து வெளியிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டதற்கு, காணாமல் போன 18 வயதுடையவர் சம்பந்தமாக பதிலளிக்கப்பட்டது.
எனவே இதிலிருந்து இவர்களின் திருட்டுத்தனம் அம்பலமாவதுடன், இதற்கு ஒரு ஊடகம் துணை நிற்பது வேதனையான ஒன்று.
ஏனெனில் இவ்வாறு பணத்துக்காகப் பொய்யான தகவல்கள் பிரிசுரிக்கப்படும் பட்சத்திலும் அது பொய் என நிரூபிக்கப்படும் பட்சத்திலும் உண்மையில் காணாமல் போனவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
ஆகவே ஊடகம் என்பது உண்மைத் தன்மையை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பது அனைவரினதும் கருத்தாகும், விருப்பாகும்.
எனவே இவ்வாறான ஆவணங்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதும், மேற்போன்றவர்கள் தஞ்சம் அடைந்திருப்பதும் கசப்பான விடயங்களே.
நாங்கள் இருக்கிறம் உண்மையை எடுத்துச் சொல்ல. எனவே பொய் சொல்ல இருக்கிறவர்கள் நாங்கள் இருக்கிறம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தகவல் lankafast.com |
Geen opmerkingen:
Een reactie posten