05 October, 2011
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவிகளை வழங்கிய ஐந்து பேருக்கு எதிராக நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்யும் நீதிவான்களை மாற்றுமாறு சட்டத்தரணி விக்டர் கோப் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணை மேற்கொள்ளும் நீதிவான்கள் பக்கச் சார்பாக செயற்படக் கூடும் எனத் தெரிவித்து சட்டத்தரணியினால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தாலும் அந்த அமைப்பு லிபிய விடுதலை போராளிகள் அமைப்புக்கு நிகரான அமைப்பு என கூறிய சட்டத்தரணி வழக்கு பக்கச் சார்பின்றி நடாத்தப்பட வேண்டும் என்றார்.
நீதிமன்றில் தான் வாதாடும்போது மேலதிக நேரமாக 30 நிமிடங்களைக் கோரியதாவும், இருந்தாலும் நீதிபதிகள் குறித்த நேரத்தை தர விரும்பவில்லை என்றும் அது ஒரு பக்கச்சார்பான நடவடிக்கையாக தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைவாக வழக்கு முன்னெடுப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐந்து சந்தேக நபர்களின் மீது பயங்கரவாத அமைப்பொன்றில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டமை மற்றும் நிதிசேகரிப்பு போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை சட்டத்தரணி விக்டர் கோப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வழக்கில் நீதிபதிகள் மாற்றப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten