தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 oktober 2011

ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்ராஸ்பூர்க் (Strasbourg) மாநாடு

[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 08:22.32 PM GMT ]
ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம்பர் 27,28ஆம் நாட்களில் இலங்கைத்தீவில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக....
....ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களிற்கு அனைத்துலக நாடுகளின் நடவடிக்கை குறித்தும் இலங்கைத் தீவில் இறுதி யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்தும் பிரான்சு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குகளில் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இராஜவரோதயம் சம்பந்தன் திரு. மாவை சேனாதிராஜா திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் திரு. செல்வம் அடைக்கலநாதன் திரு. சிவசக்தி ஆனந்தன் திரு. சிவஞானம் சிறீதரன் திரு. பா.அரியநேந்திரன் திரு. யோகேஸ்வரன் சீனித்தம்பி ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திரு. பொன்னம்பலம் கஜேந்திரகுமார் திரு. செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
எமது கருத்தரங்கு நடக்கும் அதே நாளில் ஜேர்மனின் தலைநகரில் வேறொரு சந்திப்பு இருந்ததினால் தமிழ் அரசியற் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு சிவஞானம் சிறீதரன் திரு யோகேஸ்வரன் சீனித்தம்பி ஆகியோருடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திரு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் திரு செல்வராசா கஜேந்திரனும் பங்கு பற்றியிருந்தனர்.
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களிற்கு இழைக்ப்பட்ட கொடுமைகளையும் அநீதிகளையும் ஸ்ராஸ்பூர்க் நகரபிதா மற்றும் பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு Armand JUNG ஆகியோர் சார்பில் உதவி நகரபிதா திரு Eric ELKOUBY, சில்ரிகாய்ம் நகரபிதா Raphaël NISAND, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிற்குத் தெளிவு படுத்தியது மட்டுமல்லாது வடக்கு கிழக்குப் பகுதிகளின் இறுதி யுத்தத்தின் பின் நடக்கும் நில ஆக்ரமிப்பு கைது காணாமற் போதல் என்பவற்றிற்கு மத்தியில் மக்கள் பீதியில் வாழும் நிலை பற்றியும் யுத்த களத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை இன்னமும் சிறீலங்கா அரசு வெளியிடப்படாதமை போன்ற விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் மறுநாள் 28ஆம் நாள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யபட்ட கூட்டத்தில் தெற்காசிய விபரங்களிற்குப் பொறுப்பான Jean LAMBERT> மனித உரிமைகளிற்கான ஆணைக்குழுவின் தலைவி Barbara LOCHBIHLER, சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பை ஐரோப்பியப் பாராளுமன்றில் பதிவு செய்த Karima DELLI அவர்களும் கலந்து கொண்டு இலங்கையிலிருந்து வருகை தந்த தமிழ்ப் பிரதிநிதிகளிடம் அங்கு நடாத்தப்படும் இன்னல்கள் கொடுமைகள் அநீதிகள் பற்றியும் கேட்டறிந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்யவேண்டிய உடனடி உதவிகள் பற்றியும் இலங்கையில் நடைபெறும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பாகவும் உரையாடப்பட்டது.
இன்று இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் விருப்பங்களை வெளிப்படுத்த முடியாதுள்ள சூழலில் தமிழ் மக்களின் உரிமைகளை அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் பெற்றுகொள்ளக் கூடிய வகையில் இப்படிப்பட்ட சந்திப்புக்கள் மாநாடுகள் தொடர்ந்தும் நடாத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
நடராசா கிருபானந்தன்
kirupa@hotmail.fr
தலைவர்
ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம்

Geen opmerkingen:

Een reactie posten