தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 oktober 2011

தமிழர்களின் தேவைகளை வழங்கினால் தமிழ் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸையும் அகற்ற முடியும்!- கடற்றொழில் அமைச்சர்

[ திங்கட்கிழமை, 17 ஒக்ரோபர் 2011, 05:10.52 PM GMT ]
தமிழர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதன் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அந்த பிரதேசங்;களில் இருந்து அகற்றமுடியும் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் உவர் நீர் இறால் குஞ்சு உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உங்கள் பிரதேசம் அனைத்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மனிதன் சுதந்திரமாகவும் பயமில்லாமலும் வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் இந்நிலை காணப்படவில்லை. இன்னும் தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும்; கிடைக்கப் பெறவில்லை.
1948ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் நாடு சுதந்திரமடைந்த காலந்தொட்டு 2008ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தை மீட்ட காலம் வரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பாரிய அளவிலே இந்தப் பிரதேசத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று 1948 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆண்டு காலப்பகுதி வரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதை விடவும் பல மடங்கு நிதியை வடபிரதேசத்திற்காக அரசாங்கம் செலவு செய்திருக்கிறது. இவ்வாறாக நிதியினை செலவிட்டு அபிவிருத்திப் பணிகளை செய்திருந்தும் கூட அப்பிரதேசத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் வெற்றி பெற்றது.
அதே போன்று தான் கிழக்குப்பிரதேசத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று வருகின்றது. இந்தப் பரதேசத்திலே பொருளாதார சுதந்திரமும் வாழ்க்கையை நடத்தக்கூடிய சுதந்திரமும் இருந்தால் மட்டும் போதாது.
1948 ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களைப் பற்றி பேசி வருவதால் தான் இந்நிலை காணப்படுகிறது. தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தருவதாக அவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்தப்பிரதேசத்திலே இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தேவையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் போது இந்தப்பிரதேசத்திலே இருக்கக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முடிந்துவிடும் முஸ்லிம் காங்கிரஸ_ம் முடிந்துவிடும். ஏங்களிடம் பிழை இருப்பதன் காரணமாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ_ம் இங்கு வெற்றி பெற்று வருகின்றது.
மக்கள் வாக்களிப்பது சரி. நாங்கள் தோல்வியடைந்து விட்டது ஏன் என்று சிந்திக்க வேண்டும். இந்நாட்டிலே இருக்கக்கூடிய சிங்கள மக்களின் அபிமானத்தைப் போன்று தமிழ் முஸ்லிம் மக்களின் அபிமானத்தையும் பாதுகாக்க வேண்டும். அபிமானத்தைப் பாதுகாத்துக் கொள்ள மொழி தேவையென்று அவர்கள் கருதினார்கள்.
அந்தக் காலத்திலே அதை எமக்கு வழங்க முடியாமல் போய்விட்டது. ஆகையால் தமிழ்க்கட்சிகள் வெற்றியைப் பெற்றன. நாங்கள் தோல்வியைத் தழுவினோம். ஒருசில காலங்கள் கடந்த பின் மொழிப் பிரச்சினை வேறு பிரச்சனையாக வடிவம் கொண்டது.
ஏங்கள் பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு எங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள் என்று கூறினார்கள். அந்த சந்தர்ப்பத்திலே தான் நாங்கள் மொழிக்குத் தேவையான அந்தஸ்தை வழங்கினோம். மொழி அந்தஸ்தை கேட்டபோது நாங்கள் அதை கொடுக்கவில்லை.
நாட்டை பிரிக்காத வகையில் இந்தப் பிரதேசத்திற்குத் தேவையானவற்றை நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு சில மாகாணங்களின் அதிகாரிகள் கூறுகின்றார்கள் எங்களுக்கு பொலிஸ் அதிகாரமோ காணி அதிகாரமோ தேவையில்லை என்று. தென் பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் அவற்றை கேட்கவுமில்லை. வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தான் கேட்டார்கள். ஆனால் அதிகாரம் வழங்கப்பட்டது தென் பகுதிக்கு.
2011 ஆம் ஆண்டு முடிவடைகின்ற காலப்பகுதியிலே எங்களுடைய ஜனாதிபதி அவர்கள் 1000 தமிழ் பொலிஸ் அதிகாரிகளை இப்பிரதேசத்திற்கு நியமிக்க இருக்கிறார். 11ஆவது காணிச் சீர்திருத்தத்திற்கமைய காணி அதிகார சபையொன்றும் தோற்றுவிக்கப்படும். நான் முன்னாள் காணி அமைச்சர். கடந்த ஆறு மாதத்திற்கு முன் நான் காணி அமைச்சராக இருந்திருந்தால் அவ் அதிகார சபையை நான் தோற்றுவித்திருப்பேன்.
பாராளுமன்றத்திலே செனற் கமிட்டியொன்று தோற்றுவிக்கப்பட இருக்கிறது. அதை நிறுவுவதற்காக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறான சந்தர்ப்பத்திலே நாம் கதைக்க முடியும்..
பாராளுமன்றத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர அனைத்து தமிழ் தலைவர்களும் எமது அரசாங்கத்திலே இருக்கிறார்கள். கபீர் ஹாஸீமைத்தவிர அனைத்து முஸ்லிம்; தலைவர்களும் எமது அரசாங்கத்திலே தான் இருக்கிறார்கள்.
அன்று முதல் தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றி கதைத்த அனைத்து இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் எமது அரசாங்கத்திலே தான் இருக்கிறார்கள். அன்று விஜயகுமாரதுங்கவோடு ஒன்றினைந்து வட கிழக்குப் பிரதேசங்களுக்குச் சென்று பிரசாரங்களை மேற்கொண்ட எi;னைப் போன்ற ஒரு டஜனுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் அரசாங்கத்திலே இருக்கிறார்கள்.
இந்த அரசிலே இருக்கக்கூடிய சிலர் வேறு வி;டயம் பற்றி சிந்திக்கிறார்கள். ஏதிர் காலத்திலே பாராளுமன்றத்திலே கதைத்து இந்தப் பிரதேசத்திற்கு தேவையான அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே இந்தப் பிரதேச தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேவைப்படாது.
முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ_ம் தேவைப்படாது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே ஒரு பிரதேசத்திற்கு செல்லும் போது நான் தமிழன் நான் சிங்களவன் நான் முஸ்லிம் என்று கூறவேண்டிய நிலை ஏற்படாது. அவ்வாறான சந்தர்ப்பத்திலே நாம் கூறலாம் நான் இலங்கையனென்று.
எதிர்காலத்திலே ஜனாதிபதி அவர்களோடு ஒன்றினைந்து இந்நாட்டிலே எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறான ஒரு நிலை தோன்றாத வகையிலே இப்பிரச்சனை முற்று முழுதாக தீர்த்து வைக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்திலே அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பெற்றுக்கொடுத்திருக்கின்ற சுதந்திரத்தின் மூலமாக ஆசியாவிலே ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையை தோற்றுவிக்கக்கூடிய ஒரு நிலையேற்படும்.
அவ்வாறான சந்தர்ப்பத்திலே இந்நாட்டிலேயுள்ள தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் பறங்கியர் அனைவரும் ஒன்றினைந்து எம் நாடு என்ற தேசப்பற்றோடு செயலாற்றக்கூடிய நிலை ஏற்படும். நாம் சாதி மொழி மதம் என்பவற்றிலிருந்து விடுபட்டு நாம் இலங்கையர் நாம் மனிதர் என சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும்;.
எமது கருணா அம்மான் சிந்தித்தது போன்று பல தலைவர்கள் இன்னும் சிந்திக்க முயலவில்லை. ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களுக்கு இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை கருணா அம்மான் அமைச்சராக இருக்கின்றாரென.கருணா அம்மான் பிரதமர் ஆனால் கூட நாங்கள் சந்தோசமடைவோம். அவர் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப்பிரதேசத்தை நாங்கள் மீட்டிருக்க முடியாது.
நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் பிரசாந்தன் போன்ற எத்தனையோ தலைவர்களை நாங்கள் இன்று இழந்துள்ளோம்.அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற 1800 போராளிகளை விடுவிக்கும் நிகழ்வில் நான் பங்குகொண்டேன்.
அவர்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை காண்பித்தார்கள்.அவ்வாறானவர்களை நாங்கள் இழந்திருந்தால் அது எமக்கு எவ்வளவு பெரிய இழப்பு.
ஆகவே ஆயுதத்தின் மூலமாக அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உலகளாவிய ரீதியில் முடிவுக்குவருகின்றது. பேச்சுவார்த்தைகள் மூலமாக கலந்துரையாடல்கள் மூலமாகத்தான் எமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்ககூடிய வாய்ப்புக்கிடைக்கின்றது.
ஆகவே ஆயுதப்போராட்ட ரீதியில் சென்ற லெனின் உருவச்சிலையைக்கூட உடைத்தெறிந்துள்ளனர்.அகிம்சை வழியில் சென்ற மார்ட்டின் லூதர்,மகாத்மா காந்தி போன்றவர்களின் சிலைகள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.
எனவே சமாதான நோக்கோடு செயற்படும் விடயங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டதாக அமையும்.நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த இந்த நாட்டை சுபிட்சமான நாடாக மாற்ற ஒன்று சேரவேண்டும்.

Geen opmerkingen:

Een reactie posten