தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 oktober 2011

புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு - குற்றம்சாட்டப்பட்டோரின் சட்டவாளருக்கு மேலதிகநேரம் வழக்க நீதிமன்றம் மறுப்பு


நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்படும் ஐவர் மீது ஹேக் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்போரின் சார்பில் முன்னிலையாகும் சட்டவாளர் தமது விளக்கத்தைக் கொடுக்க போதிய காலஅவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.


குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான 200 பக்கங்கள் அடங்கிய தமது வாதத்தை சட்டவாளர் விக்ரர் கொபே, நேற்று நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

காலை தொடக்கம் மாலை 5 மணி வரை அவர் தனது 200 பக்கங்களில் அடங்கிய வாதத்தை முன்வைத்து உரையாற்றினார்.

ஆனாலும் நேரம் போதுமானதாக இல்லை என்பதால் மேலும் அரை மணிநேரம் தரவேண்டும் என்று அவர் நீதிபதிகளிடம் கோரினார்.
அதற்கு நீதிபதிகள் மேலதிக நேரத்தை வழங்க முடியாது என்று கூறிவிட்டனர்.

தமது கோரிக்கையை நீதிபதிகள் நியாயமற்ற வகையில் வெட்கத்துக்குரிய வகையில் புறக்கணித்து விட்டதாக சட்டவாளர் விக்ரர் கொபே குற்றம்சாட்டியுள்ளார்.
04 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten