[ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 08:53.07 PM GMT ]
திறந்த பொருளாதாரக் கொள்கையில் இறுக்கமாகவிருந்த சீனா, உலக அரசியல் மாற்றத்திற்கு ஏற்றவாறு தனது நாட்டின் அரசியல் கொள்கைகளை மாற்றியுள்ளது. தன்னை விட எந்தவொரு நாடும் உலகத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது என்கிற நிலையை பொருளியல் புரட்சியினூடாக செய்து கொண்டிருக்கின்றது சீனா.
இதற்கு கடல் பிராந்தியம் மிக முக்கியமானது. இதன் பாதுகாப்பு இருப்பை பலப்படுத்த தேவையானது கடலை அண்டிய நாடுகளுடன் நட்புறவைப் பேணுவது மற்றும் தனது இருப்பை உறுதியாக்கிக் கொள்வது. இதனை மையமாக வைத்தே சீன அரசு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் விரும்பாத இந்திய மற்றும் அமெரிக்க அரசுகள் கூட சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாமலுள்ளது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
தனது சொந்தத் தயாரிப்பிலான பாரிய கடற்படைக் கப்பலை சமீபத்தில் சீன அரசு வெள்ளோட்டமிட்டது. அமெரிக்கக் கப்பல்களிலிருந்து எப்படியெல்லாம் யுத்த விமானங்கள் பறந்துசென்று எதிரிகளின் இலக்கை தாக்கிவிட்டு கப்பலுக்கே திரும்புகிறதோ அதே வடிவிலான அணுசக்தி கப்பலை சீன அரசு சமீபத்தில் வெள்ளோட்டமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசு கூட சீனாவின் சொந்தத் தயாரிப்பிலான பாரிய கப்பல் சம்பந்தமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. அமெரிக்க அரசு சீனாவின் ஆதரவின்றி பொருளாதாரத்தில் வளரமுடியாது என்கிற நிலையில் உள்ளது. சீனாவின் அதீத பொருளாதார வளர்ட்சி உலக அரங்கில் அதிகமாகவே பேசப்படுகிறது.
சீனாவுக்கு ஏதாவதொரு பிரச்சினை உண்டாகுமேயானால் நிச்சயமாக பொருளாதாரத்தில் சிக்கித்தவிக்கும் இன்றைய உலகநாடுகள் பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டிவரும். இவைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துத்தானோ என்னவோ வல்லரசு நாடான அமெரிக்கா கூட சீனாவின் வளர்ட்சியையும், தனது வரையறைக்கு உட்படாத பிராந்தியங்களிலும் ஆதிக்கத்தை செலுத்துவதை கண்டும் காணாமல் இருக்கிறது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அகலக்கால் பதித்திருக்கும் சீனா
சீனாவின் தென் கடல் பகுதியிலிருந்து சிறிலங்கா, பர்மா, பங்களாதேஸ், நேபாளம், மாலத்தீவு, மொரீசியஸ், பாகிஸ்தான் என கடல் மார்க்கமாக நெருங்கி வந்து, இந்தியாவின் வடக்கிலிள்ள கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவே சீனா உள்நோக்கத்துடன் தந்திரத்துடன் செயற்படுகிறது. எரிபொருளுக்காக ஏங்கித்தவிக்கும் நாடுகளில் சீனாவும் ஓன்று. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பாதுகாப்பாக தனது கொள்கலன்களை சீனாவுக்குள் கொண்டுவர வேண்டிய கடப்பாடு சீன அரசுக்கு உண்டு. அத்துடன் தனது நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை கடல்மார்க்கமாக விநியோகிக்கவே சீன நிறுவனங்கள் விரும்புகின்றன.
வானூர்திகள் மூலமாக அனுப்புவதிலும் விட கடல் கொல்கலன்களில் அனுப்புதுவதென்பது சுலபமானதுடன் செலவும் குறைவு. ஆகவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தனது செல்வாக்கில் வைத்திருக்கவேண்டிய பொறுப்பு சீன அரசிற்கு உண்டு. சில ஆபிரிக்க நாடுகளுடன் கூட சீன அரசு பல பொருளாதார ஒப்பந்தங்களை செய்துள்ளதுடன், பல முதலீடுகளையும் வைத்துள்ளது. இவைகள் அனைத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கு அதிகரிக்க வேண்டுமென்கிற அவா சீனா அரசிற்கு பல காலங்களாக இருக்கிறது.
இராணுவ ரீதியாக சீனாவின் ஆதிக்கமென்பது இந்தியாவுக்கு விடும் நேரடி அச்சுறுத்தலாகவே இருக்கிறது. மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்கள் தென் கிழக்காசியாவில் இருக்கும் இந்தோனேசியாவுக்கு இந்தியாவிலிருந்து படகில் சென்றவுடன் கூறிய கருத்து என்னவென்றால் குறித்த நீலக்கடல் இந்தியாவின் ஆதிக்கத்தில் வரவேண்டுமேன்பதுவே. நேருவின் கனவை நிறைவேற்றவே இந்தியாவின் அரசுகள் கடந்த சில தசாப்தங்களாக செயற்பட்டு, இன்று இந்து சமுத்திரத்தின் காவலாளி இந்திய கடற்படைதான் என்கிற நிலையை உருவாக்கியது.
இந்தியாவின் அதீத வளர்ச்சியையும், இந்தியாவின் தானே இந்து சமுத்திரத்தின் கதாநாயகன் என்கிற இறுமாப்பையும் உடைக்கவே சீன அரசு விரும்பியது. பொருளாதார ரீதியாக இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதொருபுறமிருக்க, இந்தியாவின் வலுவை சமநிலைக்கு கொண்டுவருவதே சீனாவின் எண்ணம். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளின் கடல் பகுதிகளில் துறைமுகம் மற்றும் விமானப்படை தளம் அமைப்பது, இராணுவத்தை நவீனப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்நாடுகளுடனான உறவுகளை சீனா பலப்படுத்தி வருகிறது.
சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை
சிறிலங்காவின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா அதிக முதலீட்டை செய்துள்ளது. தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் பல கட்டட வேலைகளை செய்வதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் வளங்களை அனுபவிக்க முனைப்பாக செயற்படுகிறது.
பாகிஸ்தானிலுள்ள குவாடர், பங்களதேசத்திலிலுள்ள சிட்டகாங்க், பர்மாவிலிலுள்ள சித்வே ஆகிய இடங்களில் துறைமுகங்கள் கட்ட சீனா உதவி செய்துள்ளது. இப்படியாக இந்து சமுத்திரப் பிராந்தியங்களிலுள்ள நாடுகளில் தனது இருப்பை பலமாக வைத்துக்கொள்ள துடிக்கிறது சீன அரசு.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமென இந்தியாவின் தென்பிராந்திய விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் சுமித் முகர்ஜி சமீபத்தில் கூறினார். இந்து சமுத்திரப் பகுதியில் கடற்கொள்ளை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன், இந்தியாவின் ஆட்புல எல்லைக்கு நெருக்கமாகவும் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் மேலதிக ராடார் பிரிவுடன் ஆளற்ற விமானங்களையும் பிராந்தியத்தில் கொண்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னம் தெற்காசியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று இந்திய விமானப்படைத் தளபதி சில மாதங்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவிலும், பாகிஸ்தானிலும் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதுடன், தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் என்.ஏ.கே. பிறவுண் கூறியிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுக்கு அயலிலுள்ள சிறிலங்காவிலும், பாகிஸ்தான் வசமுள்ள காஸ்மீரிலும் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா உட்பட பல தெற்காசிய நாடுகளில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவை அவதானமாக இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கையைக் கொடுத்துள்ளதாகவும், நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கும் இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்திய விமானப்படைத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.
இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமல்ல பல இந்திய அரசியல் கட்சிகள் கூட சீனாவின் நடவடிக்கைகளுக்கெதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். சீனாவின் ஆதிக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எல்லை மீறிச் சென்றுவிட்டால் அதனை கட்டுப்படுத்தும் பலம் இந்தியாவுக்கு நிச்சயம் இல்லை என்பது மட்டும் உண்மை. வேரிலையே களை எடுப்பதுவே சாலச் சிறந்தது என்பதை எப்போதுதான் காங்கிரஸ் தலைமையிலான இந்திய நடுவன் அரசு உணருமோ?
nithiskumaaran@yahoo.com

Geen opmerkingen:
Een reactie posten