[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 04:34.05 AM GMT ]
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டை சுமத்தி அவுஸ்திரேலிய ஏ.பி.சி தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி தொடர்பில் அரசாங்கம் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக த நேசன் செய்திதாள் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவுக்கு எதிராக இந்த போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மீனா என்ற தமிழ்ப்பெண் ஒருவரை சாட்சியாகக் கொண்டு தகவல்கள் ஒளிபரப்பியிருந்தன.
இந்தநிலையில் குறித்த மீனா என்ற பெண், பொதுமகள் அல்லவென்றும் அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்றும் த நேசன் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் இராணுவ புலனாய்வு தகவல்களின்படி மீனாவின் முழுப்பெயர் கிருஸ்ணமூர்த்தி நவரங்கிமீனாவாகும்.
இயக்கத்தில் அவரின் புனைப்பெயர் ஈழநதி என த நேசன் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அவர் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் குபேரன் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரையே திருமணம் செய்ததாகவும் த நேசன் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten