தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 oktober 2011

எழுத்து மூலம் கோரினால் கலக நிலைமைகளின் போது இராணுவத்தினரை ஈடுபடுத்த முடியும் : ஜகத் ஜயசூரிய


[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 02:35.53 AM GMT ]

பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்தால் மட்டுமே கலக நிலைமைகளின் போது இராணுவத்தினரை நிலைநிறுத்த முடியும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு அவசியம் என பொலிஸ் மா அதிபர் எழுத்து மூல கோரிக்கை விடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எதிர்ப்பு, கலகங்கள் மற்றும் போராட்டங்களின் போது  பொலிஸார் அல்லது விசேட அதிரடிப் படையினரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் இராணுவத்தினரின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும், இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நேரடியாக எழுத்துமூலக் கோரிக்கை விடுக்க வேண்டும்.
குறைந்தளவு அதிகாரத்தை பயன்படுத்தி கலகங்களை கட்டுப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten