[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 04:24.57 PM GMT ]
தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தற்போதைக்கு அவசியமில்லை என சிறுகைத்தொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதனால் தென்னிலங்கை அரசியல் மற்றும் மக்கள் சமூகம் அதிருப்தி அடையக் கூடும்.
எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மாற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியதில்லை. தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
தென்னிலங்கை மற்றும் வடக்கு சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டதன் பின்னர் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்வது குறித்து கவனம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி சுயலாப நோக்கில் அரசியல் நடத்தி வருகின்றது.
அரசாங்கம் கூட்டமைப்புடன் மட்டும் பேச்சு நடத்துவதனால் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten