[ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 05:39.58 AM GMT ]
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவையானது என அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சிபீட பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் Amnesty International - Massachusetts மாநில ஆட்சிபீடமன்றில் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவண படத்தை திரையிட்டிருந்தது.
இந்த ஆவணப்படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே Massachusetts மாநில ஆட்சிபீட பிரதிநிதிகள் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கக திணைக்கள செயலர் ஹில்லரி கிளின்ரன் அம்மையாருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இந்தக் கோரிக்கையை Massachusetts மாநில ஆட்சிப்பீட பிரநிதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.
சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அந்தக் கடித்தில் ஹில்லரி கிளின்ரன் அம்மையாரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
Massachusetts மாநில ஆட்சிபீட பிரதிநிதிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்தின் முழுவிபரம் :
சிறிலங்காவின் அண்மைக்கால முரண்பாடுகளின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களையும் ஏனைய துஷ்பிரயோகங்களையும் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்கான தேவை பற்றி நாங்கள் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம்.
இந்த விடயம் பற்றிய இராஜாங்க திணைக்களத்தின் விசாரணைகளையும் இரண்டு அறிக்கைகளையும் வரவேற்கிறோம்.
கவலைக்குரியவிதத்தில், மனிதத்துக்கு எதிரான சர்வதேச அளவிலான சட்டவிரோதமான இந்த குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் செய்தவர்கள் இன்றுவரை சட்டவிதிவிலக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றி தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர்கள் குழுவை நியமித்ததை நீங்கள் அறிந்திருக்க கூடும்.
போர்க்குற்றஙகள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சட்டங்கள் சிறிலங்கா அரசாலும் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் மீறப்பட்டுள்ளமை பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை கொண்டுள்ளது.
மேலும் இந்த நிபுணர்கள் குழு ஐ.நா. செயலாளர் நாயகம் உடனடியாக ஒரு சர்வதேச அளவிலான விசாரணையை நடத்தும் செயற்பாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும் எள்று பரிந்துரைத்துள்ளது.
மேற்படி குற்றங்கள் பற்றிய விசாரணைக்காக தான் கற்றறிந்த பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவொன்றை அமைத்திருப்பதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கிறது.
ஆனால் இந்த குழு பக்கசார்பற்ற சுதந்திரமான அமைப்பாக இல்லை. இந்த குழு பற்றி ஐ.நா. நிபுணர்கள் இது ஆழமாக பழுதுபட்ட அமைப்பாகவும் சர்வதேச தராதரத்தை பெறாததாகவும் உள்ளதனால் இது சிறிலங்கா அதிபரும் ஐ.நா. செயலாளர் நாயகமும் ஒன்றாக ஏற்றுக்கொண்ட விசாரணைகளுக்கான பொறுப்பை திருப்திப்படுத்த முடியாததாக அமைகிறது என்று தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசு மேற்படி போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை பொறுப்புடன் நடத்தும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. இரு பகுதியினராலும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்கள் பற்றி ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவையானது. ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறான சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்தக் கடித்தில் கூறப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை
Geen opmerkingen:
Een reactie posten