தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 oktober 2011

சனல்4 காணொளி போலியாக தயாரிக்கப்படவில்லை!- பிரிட்டன் அறிவிப்பு

[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 07:59.42 PM GMT ]
இலங்கையில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து சனல்4 ஊடகம் காணொளியொன்றை வெளியிட்டிருந்தது.
இந்தக் காணொளியானது பக்கச்சார்பான முறையிலோ அல்லது ஊடக விதிகளுக்கு முரணாகவோ தயாரிக்கப்படவில்லை என பிரிட்டனின் ஊடக கட்டுப்பாட்டுத் திணைக்களம் ஓஃப் கொம் அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் கொலைக்களம் என்னும் காணொளியை வெளியிட்டிருந்தது.
சனல்4  ஊடகத்திற்கு எதிராக 118 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறதது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தொடர்பாடல் கைத்தொழில் சுதந்திரம் மற்றும் போட்டி தொடர்பான அதிகாரசபையினால் செனல்4 ஊடகத்தின் காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் காணொளியானது ஊடக விதிகளை மீறி வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சீ21 என்ற சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten