தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 juli 2011

லிபியாவில் மீண்டும் வெடிக்கும் மோதல்: 11 பேர் காயம்

[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 08:01.25 மு.ப GMT ]
லிபியாவில் கடாபி ராணுவத்திற்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 11 போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களுக்கு போர்க்கள பகுதியில் உள்ள மருத்துவமனையிலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசு தொலைக்காட்சியில் கடாபியின் ஓடியோ செய்தி ஒளிபரப்பானதை தொடர்ந்து மிஸ்ரட்டா மற்றும் டாப்னியா பகுதியில் கடாபி ராணுவம் குண்டுகளை வீசத் துவங்கியது. அந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் ஆதிக்கம் உள்ள மிஸ்ரட்டாவில் 8 ராக்கெட்டுகள் விழுந்தன.
லிபியாவில் நேட்டோ நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி தருவோம் என கடாபி எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவரது எச்சரிக்கை வெளியான சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.
லிபியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. அந்த படைகள் உடனடியாக திரும்ப வேண்டும் என கடாபி எச்சரித்து இருந்தார்.
இல்லையென்றால் ஐரோப்பா பகுதிகளை குறிவைப்போம் எனவும் எச்சரித்து இருந்தார். லிபியா அரசு செய்தித் தொடர்பாளர் முசா இப்ராகிம் கூறுகையில்,"கடாபி பழி தீர்க்க அறைகூவல் விடுத்து உள்ளார். போராட்டக்காரர்களுக்கு உரிய ஆதரவு இல்லை" என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten