தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 juli 2011

போர்க் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் : போல்க் ரோவின்

[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:44.39 AM GMT ]

போர்க் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே அமைப்பின் தலைவர் போர்க் ஆர். ரோவின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புலிகளை ஆதரவளித்ததன் விளைவுகளை இன்று முழு நோர்வே நாடும் அனுபவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக இலங்கை அரசாங்கத்துடன் ஒப்படைக்க வேண்டுமென ரோவின் கோரியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே நிதி உதவிகளை வழங்கியதாக ரோவின் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்வே அரசாங்கம் இலங்கையிடம் மன்னிப்பு கோர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வே அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten