தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 juli 2011

இலங்கைக்கான உதவிகளை நிறுத்தும் தீர்மானத்துக்கு அமெரிக்க செனட், காங்கிரஸ் அங்கீகாரமளிக்கும் சாத்தியம்

[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:08.15 AM GMT ]
இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது என முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் தரப்பு அங்கீகாரமளிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வாஷிங்டனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கைக்காக வழங்கும் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க நேரிடும்.
அவசர கால நடைமுறைகளை மீளப் பெறுதல், ஊடக சுதந்திரத்துக்கு உறுதியளித்தல்
மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறாதிருப்பதால் இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை நடத்தப்படும் என அமெரிக்க வெளிவிவகார செயற்குழு கடந்த வியாழக்கிழமை ஏகமனதாக தீர்மானம் எடுத்திருந்தது.
ஒபாமாவின் நிர்வாகக் குழுவின் உயரதிகாரியான அமெரிக்க காங்கிரஸ் கொவார்ட் பேர்மன் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை முன்வைத்திருந்தார்.
காங்கிரஸ் அரங்கத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிப்பரப்பட்டதை அடுத்தே இவ்வாறான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten