[ புதன்கிழமை, 27 யூலை 2011, 08:22.31 PM GMT ]
26ஆண்டுகளாக தமிழீழ விடுதலைக்கு போராடிய போராளிகளின் இறுதிக்கட்டப் போரின் போது சரணடையும் போராளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.
அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி சரணடைந்த போராளிகளை அவரது தம்பியும் இலங்கை பாதுகாப்பு துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ கொலை செய்ய உத்தரவிட்டார்.
கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டு விட்டது என போர்க்குற்ற நிகழ்வுகளை மேற்கொள்ள கோத்தபாய உத்தரவிட்டார் என அவருடன் பணியில் இருந்த இராணுவ வீரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கோத்தபாயவின் கொடூர உத்தரவு உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இலங்கையில் தமிழீழம் மலர வேண்டும் என 1983ம் ஆண்டு முதல் தமிழ் போராளிகள் போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் உச்சக்கட்டப்போர் 2009ம் ஆண்டு நடந்தது. இந்தப் போரின்போது சரண் அடையும் தமிழ் போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி அளித்தார்.
அந்த வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த போராளி தலைவர்களை ராஜபக்ஷவின் தம்பியும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஈவு இரக்கம் இல்லாமல் கொல்ல உத்ரவிட்டார். நம்பி வந்தவர்களை கொலை செய்ய உத்தரவிடுகிறாரே என இலங்கை இராணுவ வீரர்களே அதிர்ச்சி அடைந்தனர்.
தேவை ஏற்படும்போது கொல்வது அவசியம் என கோத்தபாய தனது போர் குற்றத்திற்கு நியாயம் கற்பித்தார். சரணடைந்த தமிழ் ஈழ விடுதலை போராளிகளை கொலை செய்ய பிரிகேடியர் சவேந்திரா சில்வாவிடம் உத்தரவிட்டார். அவரிடம் கோத்தபாய உத்தரவிட்டதை நேரில் பார்த்த 58வது டிவிஷன் வீரரும் தற்போது ஆமோதித்து உள்ளார்.
கொலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவ வீர்களிடம் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் இல்லாமல் நிராயுத பாணிகளாக இருந்த அப்பாவிப் பெண்கள் மற்றும் குழந்தைகளும் கொல்லப்படடனர்.
இலங்கை இராணுவத்தின் பிடியில் 1லட்சத்து 30ஆயிரம் தமிழ் மக்கள் சித்தரவதை பட்டனர். இலங்கை போரில் பொது மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி 40ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மேலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என அஞசப்படுகிறது. பிரிகேடியர் சில்வா தற்போது ஓய்வு பெற்று விட்டார். அவர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை துணை தூதராக நியூயோர்க்கில் பணியாற்றுகிறார்.
போரின் இறுதி நாட்களில் இலங்கை ராணுவப் படைவீரர்கள் செய்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படைவீரர்களுள் ஒருவராக இருந்தவருமான 'ஃபெர்னாண்டோ' என்ற ராணுவ வீரர் ஒருவரும் சனல் 4-க்கு சில முக்கிய வாக்குமூலங்களை அளித்திருக்கிறார்.
அவர் சேனல் 4-க்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்:
"சக ராணுவ வீரர்கள் குத்துமதிப்பாக குடிமக்களை சுட்டுக் கொன்றனர். மக்களைக் கட்டி வைத்து வதைத்தனர். அவர்களின் நாக்குகளை அறுத்தனர். சிக்கிய பெண்களின் மார்பகங்களை அறுத்தனர். ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை விட மோசமானதாக இருந்தது. சிறு குழந்தைகள் சடலமாக சிதறிக் கிடந்ததையும் இதே கண்களால் தான் பார்த்தேன்."
"எண்ணிலடங்கா குழந்தைகள் மட்டுமின்றி, வயது முதியோர்களும் கொல்லப்பட்டதை நேரில் கண்டேன்.
"தங்களைக் கடந்து சென்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி கொன்று குவித்தனர். அவர்கள் யாரும் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள் தான்."
"மருத்துவமனையில் தமிழ் இளம் பெண் ஒருவரை என் சகாக்கள் 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையையும் இந்தக் கண்களாலேயே பார்த்தேன்."
"பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்களை அடித்து துன்புறுத்திய பிறகே அவ்வாறு செய்வார்கள். அதைத் தடுக்க முற்படும் பெற்றோர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவர்."
மேலும் அவர் விவரித்துள்ள கொடூரங்கள், எழுத்துகளால் கூட பதிவு செய்வதற்கு உகந்தவை கிடையாது.
இலங்கையின் தற்போதைய அரசின் கொடூர நடவடிக்கையை முன்னாள் இலங்கை ஜனாதிபதியம் ஒரே இலங்கை பெண் ஜனாதிபதியாக இருந்தவரான சந்திரிகா குமாரதுங்கவும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதிர்ச்சி தகவல்களை சனல்4 உலகிற்கு அம்பலப்படுத்தி உள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten