24 July, 2011
அதுதான் தமது கைவரிசையைக் காட்டிவிட்டனர். அவ்வப்போது அவுஸ்திரேலிய தமிழ் வானொலி இவ்வாறான சில கூத்துகளை அரங்கேற்றுவது வழக்கமாம். இவை சிலவேளைகளில் அதிகமானால் பிரத்தியேகமான கலைச்சொற்கள் அடங்கிய வாக்கியங்களில் போஸ்டர்களைக் கொண்டுவந்து இரவோடு இரவாக ஒட்டிவிட்டு ஓசைப்படாமல் சென்றுவிடுவார்களாம் சில தமிழர்கள். குறிப்பிட்ட போஸ்டர்கள் கடந்த வெள்ளிக்கிழமை சிட்னி நகரின் சில பகுதிகளில் காணப்பட்டன. அதற்கு இரு தினங்களுக்கு முன், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பிரமுகர் என்று தன்னைக்கூறிவரும் கே.பியின் (குமரன் பத்மநாதனின்) பேட்டி ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாக பல தமிழ் ஊடகங்கள் அரச சார்பாக மாறிவருவதும், பலம் எங்கு இருக்கிறதோ அதன்பக்கம் சாயும் செயலைச் செய்துவருவது கண்டிக்கத்தக்கது. இதற்குமேல் சில இணையயங்கள் அடிபணிவு அரசியலை ஊக்குவித்து கே.பி போன்றோர் செய்வது சரி என்று தமிழ் மக்களை திசைதிருப்பியும் வருகிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் வானொலியானாலும் சரி, இல்லை வேறு ஊடகங்கள் ஆனாலும் சரி தமிழர்கள் கொடுக்கும் நன்கொடை மற்றும் விளம்பரங்களில் தான் அவை பெரிதும் தங்கி நிற்கிறது. ஆனால் அவர்களின் செயல்களோ இலங்கை அரசுக்குச் சாதகமாக உள்ளது. இதனைத் தமிழர்கள் தான் புரிந்துகொண்டு தமது ஆதரவுகளை நிறுத்திக்கொள்ளவேண்டுமே தவிர, போஸ்டர் அடித்து ஒட்டுவதன் மூலம் இவர்களைத் திருத்தமுடியாது.
கருத்துச் சுதந்திடம் மிக்க நாடான அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள், தமது கருத்துக்களை துணிவாக வெளியே வந்துசொல்லுவது நல்லது. எமது இனத்திற்காகச் செயல்படும் ஊடகங்களை முதலில் இனம்கண்டு அதனை ஊக்குவிப்பதோடு, எதிராகச் செயல்படும் ஊடகங்களுக்கு மாற்றாக நாம் ஏன் புதிதாக ஒரு ஊடகத்தை ஆரம்பிக்கக்கூடாது என்பது தொடர்பாக ஆராய்வது நல்லது !
Geen opmerkingen:
Een reactie posten