தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 juli 2011

கள்ளுத் தவறணையாக மாறிய யாழ் மாநகரசபை!

(வீடியோ இணைப்பு)
யாழ். மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் நான்தான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் என்னைத்தான் தமிழ் தேதியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்தது” எனத் தெரிவித்து சபை நடுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாநகர சபை உறுப்பினர் பரஞ்சோதி மீது தண்ணீர் போத்தலை வீசி எறிந்து அடாவடித்தனம் செய்துள்ளதுடன் கீழ்த்தரமான வாத்தைப் பிரயோகங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு இருந்தார் யாழ். மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் முடியப்பு றெமிடியஸ்.


இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ். மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான ஆறாவது கூட்டத் தொடர் யாழ். நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சி உறுப்பினர் முடியப்பு றெமிடிஸை உரையாற்றுமாறு மேயர் அழைப்பு விடுத்திருந்தார்.

இவரது அழைப்பை எதிர்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி ஆட்சேபனை தெரிவித்ததும் முடியப்பு றெமிடியஸ் “நீ இருடா நாயே உனக்கு என்ன வெறியா” என மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை சபையில் பேசியவாறு எதிர் கட்சி உறுப்பினர் மீது தாக்குவதற்கு முயன்றுள்ளார்.

உடனே யாழ்.மாநகர சபை எதிரணி உறுப்பினர் கனகரெத்தினம் விந்தன் இருவரையும் மோத விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பரஞ்சோதி முடியப்பு றெமிடியஸின் அடாவடித்தனத்துக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு மேயரிடம் வேண்டுகோள் விடுத்ததார் அவரது பணிப்பை மேயர் எதுவும் செய்யமுடியாது எனத் தெரிவித்ததும் யாழ். பொலிஸாருக்கு தொடர்பு கொண்ட பரஞ்சோதி தொலைபேசியின் ஊடாக முறையிட்டுள்ளார்.

முடியப்பு றெமிடியஸின் இந்த அநாகரிகமான செயற்பாடு காரணமாக யாழ். மாநகர சபை அல்லோலப்பட்டது. அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களினால் சபை திக்குமுக்காடியது.

யாழ் நகரத்தின் கண்ணாடியாக அதனைப் பிரதிபலிக்கும் விம்பமாக விளங்கும் மாநகரசபையில் இவ்வாறான அசிங்கங்கள் நிகழ்வது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது...
30 Jun 2011

Geen opmerkingen:

Een reactie posten