கருத்துமுரண்பாடுகள்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 23 juli 2011
நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பார் என்று இந்தியாவில் பங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் சுவாமி நித்தியானந்தா நடத்திக் காட்டிய வித்தை
சக்தியை கொச்சைப்படுத்தும் சாமியார்,சுயநலத்தின் பிரதிபலிப்போ!!
(வீடியோ இணைப்பு)
கடந்த 15 ஆம் திகதி படுதோல்வி அடைந்தது. வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
மக்களை ஏமாற்றுகின்றார் நித்தியானந்தா என்று ஊடகவியலாளர் ஒருவர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலம் ஆகி இருந்தது.
நித்தியானந்தா கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்து இருக்கிறார். ரஞ்சிதா அது வரை காலமும் தலை மறைவாகி இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்தியானந்தா அண்மையில் சென்னை வந்து ரஞ்சிதாவுடன் ஊடகவியலாளர் மாநாடு நடத்தினார். செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.
இவரது ஆசிரமத்தில் கடந்த 15 ஆம் திகதி குரு பூர்ணிமா பூஜை நடந்தது. வெகு விமரிசையாக கொண்டாடினார் நித்தியானந்தா. ரஞ்சிதா உட்பட ஏராளமான பக்தர்கள், வெளிநாட்டு சீடர்கள் அவரை சுற்றி அமர்ந்து இருந்தனர். ஒரு வித்தை புரியப் போகின்றார் என்று அப்போது நித்தியானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறார் என்றார்.
அந்தரத்தில் மிதக்கின்றமை சிறிய விடயம், வெற்றுக் காசோலை கொடுத்து ஏழையை பணக்காரனாக்குகின்றமை போன்றதுதான் அது, குண்டலினியில் ஈடுபட்டு இச்சக்தியை பக்தர்கள் அடைகின்றமைக்குள் வயதாகி விடும். அதனால் பக்தர்களின் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டப் போகின்றார் என்றார். சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.
இதை அடுத்து ரஞ்சிதா உட்பட பக்தர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்தியானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்தார். எல்லோரையும் குதிக்க சொன்னார்.
குதித்து கொண்டே இருக்கின்றபோது ஒரு கட்டத்தில் சர்ரென மேலே எழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார். இதை அடுத்து எல்லோரும் சப்பாணி கொட்டி உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் குதித்தனர். இக்காட்சி ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது.
எங்கே அந்தரத்தில் பறந்து போய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ? என்கிற அச்சத்தில் சிலர் தலைக் கவசம் அணிந்து இருந்தனர். சன்னி வந்தது போல எல்லோரும் குதித்தமைதான் மிச்சம். யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் நித்யானந்தா. ரஞ்சிதாவை பார்த்து, ம்...நீயும் குதி...ம் என்பது போல சைகை காட்டினார்.
அடுத்த நிமிடம் டிசைனர் சேலையை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்தபடியே சர்வாங்கமும் அதிர குதி குதியெனக் குதித்தார் ரஞ்சிதா. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கும் மேலே மிதக்கின்ற ஆசை வந்தது. மிதக்க வைக்க சொல்லி நித்தியானந்தாவிடம் கேட்டார். நித்தியானந்தா சளைக்கவில்லை.
ஊடகவியலாளரையும் குதிக்க சொன்னார். தலைக் கவசம் மாட்டிக்கொண்டு ஊடகவியலாளரும் உட்கார்ந்த படியே துள்ளி குதித்தார். ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார்.
கடைசி வரை யாரும் மேலே மிதக்கவில்லை என்பதால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. வேடம் மீண்டும் கலைந்து விட்டதை மறைக்க அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார் நித்தியானந்தா. ஆனால் சும்மா குதித்து ஆத்திரப்பட்ட ஊடகவியலாளரோ நித்தியானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார்.
மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டப் போகின்றார்? என்று கோபமாக கேட்டார். வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை உள்நாட்டு சீடர்கள் சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர்.
23 Jul 2011
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten