தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 11 juli 2011

இராணுவமே இங்கிருந்து போ இதுவே என் முதல் கோரிக்கை நகரிப்பிரதேசத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி பரப்புரை கூட்டத்தில் ஆனந்த சங்கரி

[ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 09:18.00 AM GMT ]
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான த.தே.கூட்டமைப்பின் பரப்புரைகள் வேகம் கொண்டுள்ளன. இந்நிகழ்வுகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் வேட்பாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இங்கு வி.ஆனந்தசங்கரி உரையாற்றுகையில்
நான் இப்பிரதேசத்தின் பழைய மனிதன் பல தசாப்தம் கிளிநொச்சியில வாழ்ந்தவன். எனக்கு ஞாபகம் இருக்கின்றது முன்பு தேர்தல் பிரச்சாரம் கூட்டம் முடித்துவிட்டு இரவு12மணி ஒரு மணிக்கெல்லாம் வந்திருக்கின்றோம்.மிகவும் சுதந்திரமாக சென்றிருக்கின்றோம். ஆனால் இப்போது முடியவில்லை.
எத்தனை இடத்தில் இராணுவத்தால் மறிக்கப்படுகின்றோம். இந்த நிலைஏன் இராணுவத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார். போர் தானே முடிந்து விட்டது. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக உலகமெல்லாம் தம்பட்டம் அடித்தது அரசாங்கம். பிறகெதற்கு இராணுவத்திற்கு இங்கு அலுவல் என்னுடைய முதல் கோரிக்கை இராணுவமே வெளியேறு என்பதுதான்.
எங்கள் பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்.எங்கள் காணிகளில் எவரின் அச்சுறுத்தல் இன்றி வாழவேண்டும்.
நான் நெடுங்காலம் வாழ்ந்த கிளிநொச்சியில் என்னுடைய வாசல் தலத்தை இராணுவத்திடமிருந்து பெறுவதற்கு எவ்வளவு படாத பாடு படவேண்டியிருந்தது என்றால் உங்களுக்கு எந்த நிலையாக இருக்கும்.
அப்பட்டமாக தாம் செய்த போர்குற்றத்தை மறுப்பதோடு மறைப்பதற்கு உங்களை பகடைகாயாக்க திட்டம் போடுகின்றார்கள்.போரின்போது வைத்தியசாலைக்குள் எறிகணை மக்களை இராணுவம் கொன்றதை ஜனாதிபதிக்கு கடிதமாய் எழுதினேன். எப்படி மறுக்கமுடியும்.மறைக்க முடியும். என்ன அபிவிருத்தி நட்க்கின்றது. வடக்கு அமைச்சர் மண்ணைக் கொள்ளையடித்து கோடிஸ்வரன் ஆனதுதானே நடந்தது.
நடக்கின்றது.குடத்தனை மண்ணை தோண்டி தோண்டி தண்ணி வரப்போகின்றது.அமைச்சரின் மண்ணாசையால் அப்பாவி மக்கள் மண்ணுக்காக படாதபாடுபடவேண்டியிருக்கின்றது. கௌதாரிமுனை மண்ணை அந்த மண்ணின் சொந்தக்காரன் அனுபவிக்க முடியவில்லை. வடக்குஅமைச்சரும் எவன்எவனோஎல்லாம் திருடிப்போகின்றார்கள். இது அபிவிருத்தியின் இலட்சணமா.எஸ் எல் ஏஸ் சோதனையில் எடுபடுகின்றவர்கள் முழுதும் சிங்களவர்கள்தான்.எல்லாவற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
அது தான் நாங்கள் கேட்கின்றோம் எங்களை எங்கடபாட்டில்விடப்பாஎண்டு. நாங்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புஎன்ற தேசியத்துக்காக பாடுபடும் இயக்கம். தமிழ்கட்சி என்று கூறிக்கொண்டு அரசோடு ஒட்டிக்கொண்டு இருப்பவர் தமிழ்தேசியத்தை விற்கின்ற இயக்கம்.ஆகவே இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் எமது தேசிய இயக்கத்தை பலப்டுத்தி எதிரணிக்கு தகுந்த பாடத்தை புகட்டுங்கள் என்றார்.

இங்கு பேசிய பா.உறுப்பினர் சிறிதரன் கருத்து வெளியிடுகையில் நகரி மண் வரலாற்றுச்சிறப்பு மிக்கது . தமிழரின் தொன்மைக்கும் இம்மண்ணுக்கும் இடையறாத் தொடர்புண்டு. அதனால்தான் அரசாங்கம் இம்மண்ணில் மிகுந்த அடாவடிகளை அரங்கேற்றுகின்றது.மக்கள் மிகவும் பயந்து காணப்படுகின்றார்கள்.அவர்களில் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கின்றது. அவர்களின் காணிகளும் விக்னேஸ்வரா வித்தியாலயம் உட்டபட்ட பொது சொத்துக்களும் இன்னும் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளன. தமிழரின் பாரம்பரியங்களையும் அடையாளங்களையும் அழிக்கின்ற முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. பாவம் புத்த பகவான் கண்ட இடங்களிலெல்லாம் வைக்கப்பட்டு அவமதிக்கப்படுகின்றார்.
முற்றும் துறந்த அவரைவைத்து தமிழரின் காணிகளை சிங்களவர்கள் அபகரிக்கின்றார்கள்.ஆனைவிழுந்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களவர்களுக்கான இருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.டிப்போச்சந்திக்கு அருகாமையில் நூற்றுண்டுகளாய் இருந்ததுபோல் செங்கற்களால் சிங்கள இராணுவத்திற்கான நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டிருக்கின்றுது.
எவ்வளவு ஆபத்தான எதிர்காலத்துள் தமிழர்கள் கொண்டு செல்லப்படுகின்றார்கள். இதில் இருந்து எங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின் தமிழர்கள் தமிழ் தேசிய சிந்தனையுடையவர்களாக வாழவேண்டும். த.தே.கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten