கிழக்கு முதலமைச்சரும் TMVP கட்சியினரும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு துணைபோவதாக மக்கள் முறையிடுகின்றனர்.
அண்மையில் மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாளை (முதலமைச்சரின் கிராமம்) பிள்ளையார் கோயிலின் பிரதம குருவான (முதலமைச்சருடன் நெருக்கமானவர்) க.கு.லோகநாதக் குருக்கள் அவர்கள் கோயிலுக்கு வந்த ஒரு பெண்ணைப் பார்த்து அவளிடம் பேய் பிடித்திருப்பதாக கூறி அதனை விரட்டுவதற்கு ஒரு தனியான அறைக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்தபோது அந்த பெண் அலறிக்கொண்டு குறித்த அறையை விட்டு வெளியில் ஓடி வந்ததனை அங்கிருந்த கிராமத்தவர்கள் பார்த்துள்ளனர்.
பின்பு குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற இருப்பதனால் குறித்த குருக்களைக் கொண்டு உற்சவங்களைச் செய்வதற்கு கிராமத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலாளரிடம் முறையிட்டதுடன் குறித்த குருக்களை ஆலய குருவில் இருந்து நீக்குவதற்காக ஆலய பொதுக்கூட்டத்தையும் கூட்டியிருந்தபோது அங்கு வந்த முதலைமச்சரின் ஆதரவாளர்கள் 5 பேர் குறித்த குருவையே தொடர்ந்தும் அங்கு உற்சவம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியபோதும் பொது மக்களின் பலத்த எதிர்ப்பால் அவர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் கோயில் நிருவாகத்தினருடன் தொடர்புகொண்ட முதலமைச்சர் குறித்த குருவையே தொடர்ந்தும் உற்சவம் செய்ய அனுமதிக்குமாறும் பாலியல் துஸ்பிரயோகம் என்பது தற்போதைக்கு ஒரு பெரிய விடயம் அல்ல எனவும் சர்வ சாதாரணமாகத் தெரிவித்தாராம்.
க.கு.லோகநாதக் குருக்கள் அவர்கள் ஆரையம்பதி செல்வாநகர் சிவனார் ஆலயத்தின் பிரதம குருவாகவும் உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். |
Geen opmerkingen:
Een reactie posten