தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 juli 2011

புலிகளின் பிரச்சார வீடியோவில் இருந்த நபர் நாடுகடத்தல் !

08 July, 2011
எம்.வி சன் சீ கப்பலில் கனடா சென்ற இன்னொரு தமிழரை நாடு கடத்துமாறு கனேடிய குடிவரவுத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்நபர் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும் வீடியோ ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளாராம். சன் சீ கப்பலில் சென்றவர்களில் நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்ட நான்காவது நபர் இவர் ஆவார். அகதியாக வருபவர்கள் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராகவே, அவர்களின் ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்களித்தவராகவோ இருக்கக் கூடாது என்று எழுத்துமூல முடிவில் குடிவரவுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இந்நபர் சாதாரண அனுதாபியைவிட கூடியளவில் புலிகளுக்காக தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இலங்கை இராணுவத்தின்மீதான தாக்குதல் நடத்துவதுபோல எடுக்கப்பட்ட கற்பனையான வீடியோவில் பங்களித்துள்ளாராம். இதில் புலிகளின் பயிற்சி மற்றும் நேரடிச் சண்டை ஆகியனவும் காட்டப்பட்டுள்ளதாம்.

ஆனால் வீடியோவானது, வெறும் பொழுதுபோக்குக்கு உரியது, இது ஒரு போலியான நடிப்பாகக் கூட இருக்கலாம் என்று, குறித்த தமிழரின் வக்கீல் வாதாடியுள்ளார். ஆனல் கனடா அரசானது தொடர்ந்தும் தமிழ் அகதிகள் மீது ஒரு இறுக்கமானபோக்கைக் கடைப்பிடித்துவருகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten