தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 juli 2011

தமிழக முதல்வரும் இராஜாங்க செயலாளரும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் - அமெரிக்கா

[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 04:46.07 PM GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளன்டனும் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
கடந்த வாரம் ஹிலாரி கிளின்டன் தமது இந்திய பயணத்தின் போது சென்னைக்கு சென்றிருந்தார்.
இதன்போது அவர் ஜெயலலிதாவை சந்தித்த போது இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் இனப்பிரச்சினை முக்கிய இடம்பெற்றதாக அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்தார்.
இதன்போது இருவரும் இலங்கையில் நல்லிணக்கம் விரைவில் ஏற்படவேண்டும் என்பதில் இணக்கம் கண்டுள்ளனர்.
இதேவேளை இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்று இருவரும் வலியுறுத்தியதாக ரொபட் ஓ பிளேக் குறிப்பிட்டார்.
அத்துடன் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உயிரிழப்புகள் மற்றும் சரணடைந்தவர்கள் தடு;த்து வைக்கப்பட்டிருத்தல் போன்ற விடயங்களும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக பிளேக் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten