இனப் படுகொலையை ஏற்படுத்திய தரப்பிலிருந்து அல்லது அந் நாட்டிலிருந்து தனியானதொரு மொழியை பேசும் தனியானதொரு பண்பாட்டு விழுமியங்களை கொண்ட மக்கள் தொகுதி பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்வதற்கான நீதியானதும் நியாயமானதுமான உரிமையை கொண்டுள்ளது. இவ்வாறு பொங்கியெழும் மக்கள் படையணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் முழுவடிவம்
அன்பான தமிழ் பேசும் மக்களே!
இக் காலத்திற்கு பொருத்தமானதும் அவசியமானதுமான செய்தி ஒன்றை வெளியிடுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசினை பொறிக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவரதும் கவனத்திற்குமாக இத் தகவலை வெளியிடுகிறோம்.
அண்மைக்காலமாக சிங்கள அரசின் முகத்திரைகள் கலைந்து வரும் நிலையில் அதனை திசை திருப்பவும் தடுப்பதற்கும் தமிழ் மக்களிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கவும் பல்வேறு பொறிமுறைகளை பயன்படுத்திவருகிறது. போர் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் அதற்கு ஏற்றதுமான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்கிறது.
இதனடிப்படையில் அரசியல் ரீதியான தீர்வு ஒன்றினை வழங்குவது போல பாசாங்கு செய்து கால அவகாசத்தினை தனக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச போர் குற்றவிசாரணையை மேற்கொள்ளவிடாது காய்களை நகர்த்தி வருகிறது.
இவ்வாறு தாமதங்களை ஏற்படுத்துவதனூடாக தப்பித்துக்கொள்ளும் வழிமுறை ஒன்றை உருவாக்க முயல்கிறது. இச் சந்தர்ப்பத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்ற தோற்றப்பாட்டை அண்மைய நாட்களில் ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தமிழ் பேசும் மக்களாகிய நாம் தொடர்ந்தும் போராட வேண்டிய சூழ்நிலைகளுக்குள் தள்ளபட்டுள்ளோம். இவற்றை பின்வரும் நியாயமான காரணங்களை சுட்டிக் காட்டுவதனூடாக முன் எடுத்துச் செல்ல முடியும் என நாம் கருதுகிறோம்
01. போர் முடிவடைந்ததாக கூறி இரு ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளபோதும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலை.
02. வாழ்விடங்களுக்கு திரும்பிய மக்களுக்கான பாதுகாப்பு கிடைக்கப்பெறாமை,குற்ற செயல்கள் அதிகரித்துள்ள நிலை,அச்சமான சூழல் காணப்படுகின்றமை.
03. வாழ்வாதார உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையும்.
04. பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் மீதான விசாரணைகள் முடிவுறுத்தப்படாமை அல்லது அவர்கள் விடுவிக்கப்படாமை
05. ஆட்சி பிடிப்புக்கான தேர்தல்கள் அதிகரித்துள்ளதே ஒழிய மக்களின் நலன் கவனிக்கப்படாமை.
06. தமிழர் பகுதிகளில் வளங்கள் சுரண்டப்படுதல்,சிங்களமயமாக்கல்.
07. தீர்வு திட்டம் என்ற அடிப்படையில் ஆடப்படும் நாடகங்கள்.கருத்துக்களில் ஓர் சீரான தன்மை இல்லாத குழப்பமான நிலை.
எனவே இவற்றின் அடிப்படையில் பின்வரும் கருத்துக்களையும் திட்டங்களையும் மேம்படுத்தவேண்டும் என நாம் கருதுகிறோம்.
01. சர்வதேசத்துடன் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசின் கொள்கைகளும் கருத்துக்களும் அதிகரித்துவரும் சாதகமான நிலை எமக்கு வாய்ப்பாகவிருக்கிறது.
02. தாமதமாகும் திட்டங்கள் மற்றும் தீர்வுகள் மூலம் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளும் சூழ்நிலை ஒன்றுக்குள் தள்ளபடுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டவேண்டிய பொறுப்பு
03. சர்வதேச விசாரணை தாமதமாகும் அல்லது புறக்கணிக்கப்படும் நிலை உருவாகுமானால் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தகைய தீர்வை நோக்கி நகர வேண்டி இருக்கும் என்பதை சுட்டிக் காட்டவேண்டிய பொறுப்பு
04. ஐக்கிய நாடுகள் சபையாலும் அதன் செயலாளராலும் சிறிலங்கா குறித்ததான செயற்பாடுகள் கைவிடப்படுமிடத்து அல்லது கவனிக்கப்படாதவிடத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் பொறிமுறை
05. சர்வதேச மனித உரிமை தொடர்பான சட்டங்கள் ஒப்பந்தங்களில் கையொப்பம் இடாத நாடுகள் தம் மக்கள் மீது குற்ற செயல்களில் ஈடுபடும்போது அந் நாடுகள் மீதான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி எவ்வாறு நிலை நாட்டப்படும் என்ற கேள்வியை தோற்றுவிக்க கூடியதுமான வாய்ப்பு போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு சர்வதேசத்தின் போர்க்குற்ற விசாரணைகள் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளை குற்றம் புரிந்த நாடு நிராகரிக்கும்போது ஒரு இனப் படுகொலையை ஏற்படுத்திய தரப்பிலிருந்து அல்லது அந் நாட்டிலிருந்து தனியானதொரு மொழியை பேசும் தனியானதொரு பண்பாட்டு விழுமியங்களை கொண்ட மக்கள் தொகுதி பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்வதற்கான நீதியானதும் நியாயமானதுமான உரிமையை கொண்டுள்ளது என்னும் பிரச்சாரத்தினை நாம் முன்னெடுக்க வேண்டும் என தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம்.
நன்றி!
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
பொங்கியெழும் மக்கள் படையணி
தமிழீழம்..

Geen opmerkingen:
Een reactie posten