தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 juli 2011

ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் பண்பாடு!!

இவர்கள் அன்று அகதியாக இடம்பெயர்ந்து படாத பாடுகள்,நம்ப முடியாத பொய்கள் என்றெல்லாம்
 வரலாறுபடைத்து பின்னால் பாரிய அழிவுகளில் வந்த உண்மையான அகதிகளுக்கு அகதித்தகமை
 இல்லை என்றாக காரணமானவர்கள்.ஒற்றுமை என்பதே என்னென்று அறியாததுடன் அடுத்த தமிழரைக்கண்டால்  மறுபக்கம் திரும்பியபடி வெறித்த பார்வையுடன் விலகிச்செல்வர்.காரணம் தமது வேலைக்கு போட்டியாக வந்துவிட்டார்களே என்ற கோபந்தான்.

தாம் அன்று அறியாத இடத்தில் அறியாத மொழிக்கு மத்தியில் பட்ட கஸ்ரங்களை கதையாக சொல்லும் இவர்கள் புதியவர்களுக்கு எவ்வுதவியும் செய்ததாக வரலாறே இல்லை,ஆப்பு மட்டும் அழகாக சீவி வைப்பதிலும் போலியாக வேதனைப்படுவதிலும் வல்லவர்கள் இவர்கள் மட்டுமே(விதிவிலக்காக ஒருசிலர் உண்டு,ஆனால் அவர்களும் ஒரு குறுகிய வட்டடத்தினுள்தான் செயற்படுவர்!!)!

பலர் உறவுகளைக்கூட பணச்செலவு என்று அண்டுவதில்லை,கேட்டால் நேரமின்மைதானாம் காரணம்.கோயில்களில் பணவரவுக்காய் பூசை,புனஸ்காரமென  செய்யும் இம்மனிதர்கள் அந்நியத்தால் தவித்து உதவி கேட்டுநிற்கும் அயலாவருக்குக் கூட சாக்கு சொல்லி தட்டிக்கழிப்பதுதான் வேதனை!!

அண்மையில் ஒரு அந்நிய நாட்டில் அகதியந்தஸ்து கிடைத்த ஒருவருக்கு தமிழ் தவிர் வேற்று மொழிகள் வராது,ஆகவே அவருக்கு வீடு கிடைத்த இடத்தில் உள்ள ஒரு தமிழரிடம் மொழிபெயர்ப்பு உதவி நாடப்பட்டது.


உதவ ஒப்புக்கொண்டவர் பத்தொன்பது வருடங்களாக அந்நாட்டில் வாழ்கிறார்.பிள்ளைகள் அதிகம்.எனினும் அரச உதவியில் இருந்துகொண்டு கருப்பில் வேலையும் செய்யும் அவருக்கு ஓரளவு அந்நாட்டு மொழியறிவு உண்டு.

உதவ ஒப்புக்கொண்ட அவர் இறுதி நேரம் பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் இன்னும் வேறு சாக்குகளும் சொல்லி தட்டிக்கழித்ததுடன் அவர் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு மறைமுக அழுத்தங்களும் செய்தார்.

அவரின் மச்சானுடந்தான் இப்புதியவர் சென்றிருந்தும் அம்மைத்துனன் கூட அவமானத்துடன் திரும்பும் நிலையைத்தான் அப்பெரிய மனிதர் கொடுத்தார்.அதன் பின் ஒருநாள் ஈருருளி கேட்டபோது தான் வேறிடத்தில் இருப்பதாகவும் வீட்டில் யாருமில்லை மதியம் இரண்டுமணியளவில் அனைவரும் வீட்டில் இருப்போம் ,வாருங்கள் ஈருருளி தருகிறோம் என்று தொலைபேசியை வைத்தார்.

இரண்டு மணியளவில் வீடு சென்று அழைப்பு மணியை அழுத்தினால் யாருமே இல்லை.அரை மணிகள் காத்திருந்துவிட்டு செல்கையில் தொலைபேசிமூலம் தொடர்பாடி (வீட்டடியில் இருந்து தொலைபேசியிலும் தொடர்புகொண்டும் பதில் உடன் வரவில்லை,ஈருருளி வீட்டி வாசலில் இருந்தது!)பல சாக்குப்போக்குகள் ,பொய்கள் சொன்னார்.

இந்நபர் இன்னொரு நாட்டிலும் இருந்து பல துன்பங்களை கடந்து இப்போதுள்ள நாட்டுக்கு குடும்பமாக வந்தவர்.துன்பங்களை சொல்லி கண்கலங்கியவர்.

இவரே இப்படியென்றால்!!

தமிழா உனக்கு தனிநாடு கிடைக்கும்போது  நீ எப்படி இருக்கப்போகிறாய்??இப்படியா!!

அறியாதவனுக்கு உதவ முடியாத இந்த ஈனர்களால் தமிழனின் பண்பாடு ,கலை,கலாச்சாரம் அழியாதா??பணமென்றால் ஆவென்று வாய் திறக்கும் இவர்களுக்கு அடுத்தவரின் தேவையை ஆண்டவனாவது உணர்த்தல் கூடாதா??அவனும் சந்தர்ப்பவாதிதானே!! எப்படி ஏழைகளுக்கு(அறிவில் ,பணத்தில்)உதவுவான்?

Geen opmerkingen:

Een reactie posten