தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாட்டாளரான இலங்கைத் தமிழர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். திருஞானசம்பந்தன் மணிவண்ணன் வயது - 32 என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கி இருந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு மலேசிய பொலிஸார் ஜிங்சாங் உத்தாரா என்கிற இடத்தில் வைத்து சுமார் ஒரு மாதத்துக்கு முன் இக்கைதை மேற்கொண்டனர். மணிவண்ணன் 2007 ஆம் ஆண்டு மலேசியா வந்து இருந்தார்.
இங்கு சட்டவிரோதமான முறையில் பல வர்த்தக நிலையங்களை நடத்தி வந்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தேவையான பொருட்கள் பலவற்றையும் இவ்வர்த்தக நிறுவனங்களின் பெயரால் கொழும்புக்கு அனுப்பி இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்களால் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிதியின் ஒரு பகுதி இவரிடம் உள்ளது என்று இலங்கைப் பொலிஸார் நம்புகின்றனர். |
Geen opmerkingen:
Een reactie posten