தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 juli 2011

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு காரணமானோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் - கருணாநிதி

[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 12:53.52 AM GMT ]
இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு பின்னால் இருந்து செயற்பட்டோர் சட்டத்துக்கு முன் கொண்டு வரப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.
அத்துடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டுள்ளது.
மனித உரிமைகளை மதிக்கும் நாடு என்ற வகையில் இந்தியா, இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் கொண்டு வரவேண்டும்.
அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படவேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவிதுள்ளார்.
இது தொடர்பான தீர்மானம், கோவையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற திமுக கட்சியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten