தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 juli 2011

அநாமதேயத்தின் நிஜமுகம்: யார் இந்த விதுல் சிவராசா ?

22 July, 2011

பளை பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை போட்டியிலிருந்து ஓதுங்கிக்கொள்ளுமாறும் அவ்விதம் செய்யாவிடில் விபரீத விளைவுகள் ஏற்படும், உயிருக்கு ஆபத்துவரும் என்றும் ஈபி;டிபி அமைப்புடன் இணைந்து செயற்படும் ஆயுததாரி கருணாகரன் என்பவர் மிரட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

யாரிந்த கருணாகரன் ?

இயக்கச்சியை சேரந்த சிவராசா கருணாகரன் என்பவர், முன்பு விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின வெளியீடான வெளிச்சம் இதழின் ஆசிரியராக இருந்தவர். விடுதலைப்புலிகளினால் தமீழீழ தேசியத் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான �விடுதலைப்புலிகள்�, �சுதந்திரப்பறவைகள்�, �ஈழநாதம்� ஆகிய பத்திரிகைகளில் வெளிவாசல் பாலன், மக்ஸ்வெல் மனோகரன், பிரகலாத கேமந் என்ற பெயர்களில் ஏராளமான கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிக் குவித்த்தார். ஆனையிறவுச்சமரை நினைவுகொள்ளும் வகையில் வெளிவந்த ஆனையிறவு கவிதை நு}லை உருவாக்குவதிலும் இவரது கணிசமான பங்கிருந்தது.

இயக்கச்சி கருணா என்ற பெயரில் அறியப்படாத ஒருவராக இருந்த இவரை விடுதலைப்புலிகள் தமிழ்இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் 2008 ஆண்டில் விடுதலைப்புலிகளை பகைத்துக் கொண்ட இவர் அன்றிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக மறைமுகமாக செயற்பட்டுவந்தார். 2009 ஏப்பிரல் மாதத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த கருணாகரன் தென்மராட்சியில் உள்ள அல்லாரை என்னுமிடத்திலுள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கிருந்து விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்து �அநாமதேயன்� என்ற பெயலில் இவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் �காலச்சுவடு� இலக்கிய சஞ்சிகையில் வெளியாகியிருந்தன.

ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமார் என்ற இவரது உறவினர் மூலமாக ஈபிடிபியில் இணைந்து செயற்படும் கருணாகரனும், முன்னர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவரான அன்ரன் அன்பழகன் என்பவரும் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுடைய ஊடகவியலாளர்கள், மற்றும் ஆக்க இலக்கியவாதிகளை அச்சுறுத்திவருவதாக பெயர்குறிப்பிட விரும்பாத ஆனால் தமிழ் இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்ட இலக்கியவாதி ஒருவர் தெரிவித்தார். நோர்வேயிலிருந்து இயக்கப்படும் �பொங்கு தமிழ்� இணையதளத்தில் விதுல் சிவராஜா, சிவ. பாக்கியராஜா, வெண்ணிலா எனப் பல புனைபெயர்களில், அடிபணிவு அரசியலை ஆதரித்து ஊதியம் பெற்று எழுதி வருகிறார். இதுதவிர வெவ்வேறு பெயர்களில் இணைய ஊடகங்களிலும் எழுதி வருகிறார். தினக்குரல் பத்திரிகையில் கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன், ஈபிடிபியின் தினமுரசு பத்திரிகையில் யோசப் தயாளன் ஆகிய பெயர்களிலும் இவர் கட்டுரைகளை எழுதிவருகிறார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது அதிருப்தி கொணடவர்களால் இயக்கப்படும் �பொங்கு தமிழ்� தான் இப்படியென்றால், எதுவித கொள்கையுமற்ற, பணத்திற்காக எழுதிக்குவிக்கிற எழுத்து விபச்சாரியான கருணாகரனை மக்கள் வானொலி என தன்னை அழைத்துக் கொள்கிற �அனைத்துலக உயிரோடை� (ஐ.எல்.சி தமிழ்) போன்ற ஊடகங்களும் அணைத்துக் கொள்வதுதான் விந்தையாக இருக்கிறது. இந்த விபச்சாரியின் எழுத்துக்களுக்கு வானொலியில் குரல் வடிவம் கொடுக்கிற பெருமதிப்புக்குரிய தாசீசியஸ் ஐயா அவர்கள் தயைவு கூர்ந்து இதனைக் கவனத்தில் எடுப்பாரா ?

கரிகாலன்
(ஒரு பேப்பர் 15.07.2011)

Geen opmerkingen:

Een reactie posten