[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:55.01 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை யுத்தக் குற்றம் தொடர்பான அறிக்கையில் சிறீலங்கா தரப்பிற்கு ஐந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்த மேற்படி விசாரணைக் குழு விடுதலைப்புலிகள் மீது ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
இது நேரிடையாக தமிழர்களே அதிக யுத்தக்குற்றம் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீதான தனது வன்மத்தை தீர்க்குமுகமான ஒரு பகுதியும் அவ்வறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களில் விடுதலைப்புலிகள் சார்பானவர்கள் “மாபியா” எனப்படும் கொள்ளைக்கூட்டத்தையொத்த செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற கருத்து ஒழிவுமறைவின்றி அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாபியா என்கிற கருத்து மேற்குலக நாடுகளின் கருத்தாகவே இவ்வறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் யாதெனில் ஓசன் லேடி என்ற கப்பல் 76 அகதிகளுடன் கனடாவை சென்றடைந்த போது, கனடிய இராஜதந்திரியின் உதவியாளர் ஒருவர் “விடுதலைப்புலிகள் இனி எந்தக் காலமும் தமிழர்கள் தொடர்பாகப் பேச அருகையற்றவர்கள், அவர்கள் ஒரு மாபியா கூட்டமாகவே செயற்பட ஆரம்பித்து விட்டார்கள்” என்ற கருத்தை ஒக்டோபர் 2009ல் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் அதே வாசகங்கள் தெளிவாக இடம்பெற்றிருக்கின்றன.
விடுதலைப்புலிகள் இப்போது புலம்பெயர்ந்த நாடுகளில் மாபியாக் கூட்டமாகவே செயற்படுகிறார்கள். இவர்கள் நிதிசேகரப்பிற்கு ஆலயங்கள், கல்வி நிலையங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றே அந்த அறிக்கை செல்கிறது.
இவ்வாறு சிறீலங்கா அரசின் கொடிய செயல்களிற்கு சமனாக விடுதலைப்புலிகளும் குற்றச் செயல்கள் புரிந்தார்கள் என்று வம்பிற்குப் பேசும் அந்த அறிக்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் அவர்களின் தலைமைகளையும் இவ்வாறு மாபியா என்று கொச்சைப் படுத்துவத்தை நாம் ஏனோ கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டோம்.
ஆனால் இந்தச் செயற்பாடு விடுதலைப்புலிகளை மாத்திரமல்ல, புலம்பெயர்ந்த தலைமைகளையும் முன்வைத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது.
இதனை முறியடிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எம்மை இணைத்து செயற்பட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பாக ஐ.நா. அறிக்கையில் சொல்லப்பட்டவற்றை அவர்களையே மீளப் பெற வைக்க வேண்டும்.

Geen opmerkingen:
Een reactie posten