இலங்கையில் தமிழர்களைத் தான் இராணுவமும் அரசும் கொலைசெய்தது என்றால் தற்போது தமிழையும் அல்லவா கொலைசெய்ய செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பருத்தித்துறை - மருதங்கேணி, நாகர்கோவிலூடான பாதையை அமைச்சர் பசில் ராஜபக்ஷ 03.07.2011 அன்று திறந்து வைத்தார். டக்ளஸ் தேவானந்தாவும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் வைத்திருந்த அறிவித்தல் பலகையில் காணப்பட்ட தமிழ் எழுத்துக்களில் பிழைகள் இருக்கின்றன. ஒரு தமிழ் அமைச்சர் பங்கு பற்றிய ஒரு நிகழ்வில் இவ்வாறான பிழைகள் இருக்கலாமா?
அப்படி இருக்கும் பட்சத்தில் அவரோ இல்லை அவரது அதிகாரிகளோ பெயர்ப்பலகை எழுதியவர்களை கண்டித்திருக்கலாம். அதாவது யாழில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அரச ஆதரவுபெற்ற சிங்களவர்கள் வேலைசெய்து கொடுப்பதோடு, அவர்கள் தான் பணிகளை முன்னெடுக்கின்றனர். இதனைத் திருத்தவேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தால் டக்ளஸ் மாமா என்ன செய்வார்? முதலில் அவருக்கு இப் பலகையில் எழுத்துப் பிழைகள் இருப்பது தெரியுமோ என்னமோ? சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து இவர் இருப்பதால் தமிழ் எங்கே நினைவில் இருக்கப்போகிறது?

Geen opmerkingen:
Een reactie posten