உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெற குறுகிய மணித்தியாலங்கள் உள்ள நிலையில் பா.உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் அதிகாரமளிக்கப்பட்ட முகவருமாகிய சி.சிறீதரனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகளும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் த.தே.கூட்டமைப்பின கிளி. மவட்ட பணிமனையான அறிவக்த்தில் சந்தித்து கருத்து அறிந்துள்ளனர்.இங்கு கருத்து தெரிவித்த சிறீதரன் இந்தத்தேர்தலில் அரசாங்க கட்சியான ஜ.ம.சு.கூட்மைப்பின் நடவடிக்கைகள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஓங்கிக்காணப்படுகின்றன.இராணுவம் நேரடியாக இறங்கி அரச கட்சிக்hக பிரச்hரத்திலும் எதிரணி வேட்பாளர்களை அச்சுறுத்தும் மற்றும் கடத்தும் நடவடிக்கைகளிலும் பணத்தை கத்தைகத்தையாக தேர்தல் களத்தில் இறக்கி மக்களின் வாக்குச்சீட்டுக்களை பறித்து அரசாங்க கட்சிக்கு போடும் திட்டத்திலும் ஈடுபடுவது நேரடியாக அவதானிக்கப் பட்டு மக்களால் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் சம்புக்குளம் கல்மடுநகர் மாயவனூர் விநாயகபுரம் போன்ற இடங்களில் இராணுவத்தினர் வாக்குச்சீட்டுக்களை பணத்துக்கு வாங்கமக்களை அச்சுறுத்தியுள்ளனர்.இதே வேளை எமது வேட்பாளரான கோணாவிலை சேர்ந்த சின்னையா சுப்பையா என்பவரை நாமல் ராஜபக்சவின் ஆடியாட்கள் கடத்திச்சென்று அச்சுறுத்தி நாமல் ராஜபக்சவோடு நிற்கவைத்து படமெடுத்து வாக்குமுலம் கொடுக்கவைத்து கொழும்பு அரசபத்திரிகையில் ஒரு பொய்யான பிரசுரத்து தமிழ்மக்களின் வேட்பாளர்ளுக்கும் கட்சிக்கும் அசிங்கங்களை ஏற்படுத்தும் தேர்தல் ஜனநாயக நடைமுறைகளை மீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதே வேளை 20ம் நாள் நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தேர்தல் விதிமுறையின்படி நிறுத்தப்பட வேண்டி இருக்க ஜ.ம.சு.கூட்டமைப்பு ஈ.பி.டி.பி அதன்பின்பும் அடுத்தடுத்த நாட்களும் துண்டுப்பிரங்களை ஓட்டியதுடன் ஒலிபெருக்கி முலம் பிரச்சாரத்தை மேற்கொண்டது.இது பற்றி பொலிசார் தேர்தல் முறைப்பாட்டு மையங்கள் போன்றவற்றில் முறையிட்ட போதும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில் அரசாங்கக்கட்சி தொடர்ந்தும் தேர்தல் விதிமுறைகளை மீறிக்கொண்டே இருக்கின்றன. இதன்காரணமாக மக்கள் ஜனநாயக விரும்பிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். பணம் இராணுவம் சர்வாதிகாரம் என்பவற்றை பயன்படுத்தி ஆரசாங்கம் இத்தேர்தலில் தாம் வெல்ல வேண்டுமென்பதற்காக முற்றுமுழுதாக தேர்தல் நடைமுறைகளை மீறியுள்ளதால் இங்கு ஒரு நீதியான தேர்தல் நடைபெறும் என்பது சுந்தேகமே எனத்தெரிவித்தார். |
23 Jul 2011 |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 23 juli 2011
நாமல் ராஜபக்சவின் ஆடியாட்கள் கடத்திச்சென்று அச்சுறுத்தி நாமல் ராஜபக்சவோடு நிற்கவைத்து படமெடுத்து வாக்குமுலம்
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten