சிங்கள இனவாத அரசினால் 2009 மே 18ல் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவிட்டது. சோழ மாமன்னனான இராசஇராசன் தஞ்சையில் எழுப்பிய மாபெரும் கற்கோயிலுக்கு அடுத்தபடியாக, ஈழ விடுதலைக்காக முள்ளிவாய்க்கால் படுகொலையில் பலியானவர்களின் நினைவாகவும், தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னத்தை நிறுவும் முயற்சியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten