தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 juli 2011

இலங்கைக்கு தங்களை ஏமாற்றி அழைத்துப் போனதாக சொல்கிறார் சினிமா பாடகி சுசித்ரா

[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 02:27.23 PM GMT ]
ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டுக்குழு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்தநிலையில், போர்க்குற்றவாளி ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆடிப்பாடி தேர்தல் பிரச்சாரம்  செய்வதற்காக மனோ, பாடகி சுசித்ரா, கிரிஷ் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன் இலங்கைக்குப் போனார்கள்.
சிங்கள இராணுவத்தால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை சற்றுத் தாமதமாக உணர்ந்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையை போர்க்குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளனர் உலக மக்கள். குறிப்பாக ராஜபக்ச எந்த நேரமும் சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நேரம் நெருங்கி வருகிறது.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டுக்குழு ஏற்கனவே தடை விதித்துள்ளது. நடிகர் சங்கமும் இந்தத் தடையை வலியுறுத்தி வருகிறது. சீமானின் நாம் தமிழர் இயக்கம் இதுகுறித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
இவை எல்லாம் தெரிந்த பிறகும், 'போர்க்குற்றவாளி' ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆடிப் பாடி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மனோ, பாடகி சுசித்ரா, கிரிஷ் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன் இரகசியமாக இலங்கைக்குப் போனார்கள்.
இவர்களின் கெட்ட நேரம், இந்தப் பயணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. வைகோ மற்றும் நெடுமாறன் இருவரும் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர். நடிகர் சங்கமும் உடனே நாடு திரும்புமாறு இவர்களுக்கு செய்தி அனுப்பியது.
ராஜபக்ச தரும் பணத்துக்காக இலங்கைக்கு இவர்கள் மேற்கொண்ட திருட்டுப் பயணம் அம்பலமாகிவிட்டதால், அவமானப்பட்டு நிற்கிறார்கள் மனோ உள்ளிட்ட அத்தனை பேரும்.
இதில் பாடகி சுசித்ரா கூறியதாவது்
இலங்கையில் தேர்தல் நடப்பதே தெரியாது என்றும், பணத்துக்காக இலங்கைக்குப் போகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்களை விளையாட்டு மைதான பூமி பூஜைக்காக சொல்லித்தான் இலங்கைக்கு அழைத்தனர். அரசியல் தொடர்புள்ள நிகழ்ச்சியா என்று விசாரித்தோம். இல்லை என்றனர். அதன் பிறகு இலங்கை புறப்பட்டுச் சென்றோம்.
கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியதும் ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதற்கு நாங்கள் வந்திருப்பதாக  உள்ளூர் தமிழ் டி.வி. சனலில் செய்தி சொன்னார்கள். அதை பார்த்ததும் அதிர்ச்சியானோம். அதன் பிறகுதான் அங்கு தேர்தல் நடப்பதே எங்களுக்கு தெரிந்தது.
மனோ உடனடியாக சென்னைக்கு தொடர்பு கொண்டு நடிகர் சங்க நிர்வாகிகளிடம் பேசி என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார். அவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பும்படி கூறினர். நாங்களும் வந்து விட்டோம். இலங்கைக்கு எங்களை ஏமாற்றி அழைத்து போய் விட்டார்கள்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் உணர்வுபூர்வமாக நான் ஒன்றி இருக்கிறேன். இலங்கையில் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் மனதை ரொம்ப பாதித்தது. இலங்கைக்கு பணத்துக்காக நாங்கள் போகவில்லை. எங்களை அழைத்தவர்களிடம் ஒரு காசுகூட வாங்காமல் திரும்பி விட்டோம் என்று கூறியுள்ளார் சுசித்ரா.

Geen opmerkingen:

Een reactie posten