இதற்காக புலியாதரவாளர்கள் ஒல்லாந்திலிருந்து வெளியேறி எதிர்ப்பை காட்டவா போகிறார்கள்! சட்டரீதியில்லாமல் கள்ள வேலைகள் செய்து உழைப்பதை விடவா முடியும்!
[ சனிக்கிழமை, 09 யூலை 2011, 04:00.06 AM GMT ]
பிரான்சு, இத்தாலி, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் புலிச் சந்தேக நபர்கள் விடுதலையாகும் இன்றைய காலத்தில் சிவில் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நெதர்லாந்து காட்டும் தீவிரம் வியப்பளிக்கிறது. போர்க் குற்றவாளியாகக் காணப்படும் சிறிலங்காவையும் அது துணைக்கு அழைத்துள்ளது
நெதர்லாந்து இராச்சியம் (Kingdom of the Netherlands) வட மேற்கு ஐரோப்பாவில் வட கடல் (North Sea) ஓரமாகக் காணப்படுகிறது. அதன் புவியியல் எல்லைகளாகக் கிழக்கில் ஜேர்மனி, வடக்கிலும் மேற்கிலும் வட கடல், தெற்கில் பெல்ஜியம் என்பன அமைகின்றன.
நெதர்லாந்தின் தலைநகர் அமஸ்ரடாமாக (Amsterdam) இருந்தாலும் நாட்டின் அரச கருமபீடம், நீதித் தலைமையம் என்பன ஹேக் (Hague) நகரில் இயங்குகின்றன. “சர்வதேச நீதி அமைப்புக்களின் தலைநகரம்” என்று ஹேக் வர்ணிக்கப்படுகிறது.
பின்வரும் சர்வதேச நீதி மன்றங்கள் ஹேக் நகரில் காணப்படுகின்றன. நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றம் (Permanent Court of Arbitration), சர்வதேச நீதி மன்றம் (The International Court of Justice), முன்னாள் யூகோசுலொவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (The International Criminal Tribunal for The Former Yugoslavia), மற்றும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் (The International Criminal Court).
இவற்றைவிட இன்னும் இரண்டு சர்வதேச நீதி மன்றங்கள் நெதர்லாந்தில் இருக்கின்றன. அவை இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் அமைப்பு (The Organization for The Prohibition of Chemical Weapons), லெபனோன் நாட்டிற்கான விசேட தீர்ப்பாயம் (The special Tribunal for Lebanon).
மேலும் இன்னும் இரண்டு அமைப்புக்கள் நெதர்லாந்தில் இயங்குகின்றன. யூரோப்பொல் எனப்படும் ஜரோப்பிய ஒன்றியத்தின் குற்றவியல் புலனாய்வு முகவரகம் (The EU Criminal Intelligence Agency) (Euro pol) யூரோஜஸ்ற் எனப்படும் நீதித்துறை ஒத்துழைப்பிற்கான ஜரோப்பிய ஒன்றிய முகவரகம் (EU Judicial Cooperation Agency) (Euro just).
நேற்ரொ அமைப்பை 1949ல்; உருவாக்கிய 12 நாடுகளில் ஒன்றாக நெதர்லாந்து இடம்பெறுகிறது. அதே போல் ஜரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்திற்குப் பொறுப்பான 6 நாடுகளில் ஒன்றாகவும் அது அமைகிறது. உலக வர்த்தக அமைப்பை (World Trade Organization) உருவாக்கிய நாடுகளில் ஒன்றாகவும் நெதர்லாந்து இடம் பெறுகிறது.
உலகின் மிகப் பழமை வாய்ந்த பங்குச் சந்தை மையம் அம்ஸ்ரடாமில் காணப்படுகிறது. நெதர்லாந்தின் வர்த்தக மற்றும் நிதித் தலைநகராகவும் அது திகழ்கிறது. ஜரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம் றொட்டர்டாம், (Rotterdam) நெதர்லாந்தில் காணப்படுகிறது.
நீதித்துறையைப் பொறுத்தளவில் மிகத் தாராளமான கொள்கையை நெதர்லாந்து பின்பற்றுகிறது. போதைப் பொருள் பாவனைக்கு அனுமதி வழங்கும் நாடாகவும், கருணைக் கொலையை சட்டபூர்வமாக்கிய நாடாகவும், ஓரினத் திருமணத்தை அனுமதித்த முதலாவது ஜரோப்பிய நாடாகவும் நெதர்லாந்து சிறப்படைந்துள்ளது.
நெதர்லாந்தின் மக்கள் தொகை 16,491,852. இதில் 10,000 பேர் ஈழத் தமிழர்கள். இவர்கள் 1983ம் ஆண்டின் இனக் கலவரத்திற்கு பிறகு ஜரோப்பாவுக்கு இடம் பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர். ஈழத் தமிழர்களுக்கும் நெதர்லாந்து நாட்டிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு.
17ம் நூற்றாண்டு தொடக்கம் ஜரோப்பாவின் கடலாதிக்க நாடாகவும் ஆசிய அமெரிக்கக் கண்டங்களில் காலனித்துவ ஆட்சிப் புலங்களைக் கொண்ட நாடாகவும் நெதர்லாந்து இடம்பெற்றது. இந்தோனேசியாவை நெடுகாலம் ஆட்சி செய்த வரலாறு அதற்கு உண்டு.
ஜாவாத் தீவு டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனி ஆட்சியிலும் அரசின் ஆட்சியிலும் 350 வருடங்கள் இருந்தது. தெற்கு ஆசியக் காலனிகளை ஜாவாவின் பற்ரேவியா (Batavia) நகரில் இருந்து நெதர்லாந்து ஆட்சி செய்தது.
நெதர்லாந்தின் ஒரு முக்கிய அங்கமான கொலண்ட் (Holland) ஒல்லாந்தர்கள் என்ற பெயரை இந்த நாட்டவர்களுக்கு வழங்குகிறது. 1656ல் இலங்கைத் தலைநகர் கொழும்பை ஒல்லாந்தர்கள் கைப்பற்றினார்கள். அதற்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த போத்துக் கேயர்களை அவர்கள் வெளியேற்றினார்கள்.
போத்துக்கேயர்களிடம் இருந்து யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர்கள் 1659 யூன் 20ம் நாள் கைப்பற்றினார்கள். மலைப் பகுதியான கண்டி இராச்சியம் தவிர்ந்த இலங்கைத் தீவு முழுவதும் பிரிட்டிசார் வரும் வரை ஒல்லாந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டது.
ஒல்லாந்தர்கள் விட்டுச் சென்ற யாழ் கோட்டை இன்றும் அந்நியன் ஆட்சியின் சின்னமாக இடம்பெறுகிறது. யாழ் குடா நாட்டில் புகையிலைச் செய்கையை அறிமுகஞ் செய்தவர்கள் இவர்கள் தான். அவர்களுடைய மொழிச் சொற்கள் சில யாழ்ப்பாணத் தமிழில் கலந்துள்ளன. தெற்கு ஆசியாக் காலனிகளை ஆட்சி செய்த ஒல்லாந்தர்கள் பலர் இளைப்பாறிய பிறகு தாயகம் திரும்ப விருப்பமின்றி யாழ் நகரில் குடியேறினார்கள்.
இலங்கையில்; அமைதியின்மை தோன்றிய பிறகு இவர்களுடைய பிற்சந்ததியினர் அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டனர். தமிழர்களோடு இனக்கலப்புச் செய்தோர் யாழ் நகர், மட்டு நகர், கொழும்பு ஆகியவற்றில் வாழ்கின்றனர். ஈழத் தமிழர்கள் நெதர்லாந்திற்குச் சென்றதில் வியப்பில்லை.
நெதர்லாந்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பு (AIVD) நெதர்லாந்து வாழ் ஈழத்தமிழர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறது. ஜரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்த விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கல், ஆயுதக் கொள்வனவு என்பன நெதர்லாந்துத் தமிழர்களால் முன்னெடுக்கப் படுவதாக அது நம்புகிறது.
தமிழர் ஒன்றிணைப்புக் குழு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், ஆகியவற்றின் தலைவர்களைப் பயங்கரவாதச் சந்தேக நபர்களாக ஏ.ஜ.வி.டி பார்க்கிறது. இலங்கை உள்நாட்டுப் போருக்கு நெதர்லாந்துத் தமிழர்கள் செய்த பங்களிப்பு பற்றிய பரந்து பட்ட விசாரணையை நெதர்லாந்து அரசு 2009 தொடக்கம் மேற்கொள்கிறது.
இந்த விசாரணைக்கு ஒப்பரேசன் கோனின்க் (Operation Koninck) என்று பெயரிடப்பட்டுள்ளது. 2011 ஏப்ரல் 26ம் நாள் நெதர்லாந்து வாழ் ஏழு ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 விடுதிகள், வியாபார நிலையங்கள் சோதனை இடப்பட்டன. கணினிகள், குறுவெட்டுக்கள், ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள், நிழற்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
அத்தோடு 40,000 யூரோ பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பொலிஸ் அறிக்கை கூறுகிறது. நீதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப் பின்னலின் முக்கியஸ்தர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஒருவரான எஸ். இராமச்சந்திரன், வயது 52 நிதிச் சேகரிப்பில் ஈடுபடும் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று பொலிசார் கூறுகின்றனர். போர் முடிந்த பின்னரும் வன்னிக் காட்டில் பதுங்கி இருக்கும் புலிகளுக்குப் புதிய போரைத் தொடங்குவதற்கான நிதி வழங்கல் பொறுப்பை இவர் மேற்கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். இது தொடர்பில் ஆர். சிறிரங்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒப்பரேசன் கோனின்க் குழுவினர் நிதிச் சேகரிப்பு விசாரணையை நோர்வே நாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஒரு நீதிபதி ஜந்து வழக்கறிஞர்கள் கொண்ட குழு நோர்வே காவல்துறை உதவியுடன் நெடியவன் என்று அழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன், வயது 35 என்ற புலிச் சந்தேக நபரைக் கைது செய்துள்ளது. இவர் ஒஸ்லோ (Oslo) நீதி மன்றத்தில் முன்நிலைப் படுத்தப்பட்டு இரு நாட்களாக விசாரணை செய்யப்பட்டார்.
நெடியவனின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு நிபந்தனைப் பினையில் விடுதலை செய்யப்பட்டார். நோர்வே காவல்துறை அவரைக் கண்காணிக்கிறது. நெதர்லாந்தில் சேகரிக்கப்பட்ட நிதியை நெடியவன் பொறுப்பேற்றதாக அவர் மீது இரு நாட்டுப் காவல்துறையினர் குற்றங் சாட்டுகின்றன.
2009 மே மாதத்திற்குப் பிறகு சிங்கள இராணுவம் வன்னியில் கைப்பற்றிய விடுதலைப் புலிகளுடையவை என்று கூறப்படும் ஆவணங்களை சிறிலங்கா அரசின் ஒத்துழைப்போடு தாம் பரிசீலனை செய்வதாக நெதர்லாந்து காவல்துறை கூறுகிறது. இதன் அடிப்படையில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்சு, இத்தாலி, அவுஸ்திரேலியா ஆகிய நாட்டுப் புலனாய்வாளர்களின் துணையோடு புலிகளின் சர்வதேச வலை அமைப்பு பற்றி விசாரிப்பதாகவும் அது கூறுகிறது.
ஒப்பரேசன் கோனின்க் விசாரணைக் குழுவைச் சேர்ந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அமெரிக்காவுக்குச் சென்று முக்கிய சாட்சிகளை விசாரித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்காக ஆயுதக் கொள்வனவு செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டு தண்டனைக் குறைப்பிற்காக அமெரிக்க நிதித்துறைக்கு மனுச் செய்த ஈழத் தமிழன் பிரதீபன் தவராஜா என்பவரையும் விசாரணை செய்துள்ளனர்.
ஒரு விசேட விசாரணைக் குழு 2011 யூன் 16ம் நாள் சிறிலங்கா சென்று அரசின் பிடியில் இருக்கும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனையும் இன்னும் 13 விடுதலைப் புலி சந்தேக நபர்களையும் விசாரணை செய்தது. கே.பி என்பவர் புலிகளின் சர்வதேச முகவராகவும் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பானவராகவும் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அரசின் கைதிக் கூண்டில் இருப்பவர்களின் வாக்குமூலம் அரசுக்குச் சார்பாக இருக்கும். இந்த வாக்கு மூலத்தின் நம்பகத்தன்மையும் சட்ட ஏற்புடமையும் கேள்விக் குறியாகும்.
1983 – 2009 காலத்தில் விடுதலைப் புலிகள் சர்வதேச மட்டத்தில் நடத்திய நிதி சேகரிப்பு, ஆயுதக் கொள்வனவு பற்றிய பரந்த ஆழமான விசாரணையைத் தாம் மேற்கொள்வதாக ஒப்பரேசன் கோனின்க் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரான்சு, இத்தாலி, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் புலிச் சந்தேக நபர்கள் விடுதலையாகும் இன்றைய காலத்தில் சிவில் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நெதர்லாந்து காட்டும் தீவிரம் வியப்பளிக்கிறது. போர்க் குற்றவாளியாகக் காணப்படும் சிறிலங்காவையும் அது துணைக்கு அழைத்துள்ளது.
கனடா குடிவரவு மற்றும் அகதிகள் அதிகார சபை ”தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என்று குற்றஞ் சுமத்துவதற்கு வெறும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பு போதுமானதல்ல” என்று தீர்ப்புக் கூறியுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten