தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக செயல்பட்ட அநுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற நயோமி டீ சொய்ஷா.
பெண் புலி என்பதுதான் புத்தகத்தின் பெயர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 17 ஆவது வயதில் 1980 ஆம் ஆண்டில் சிறுவர் போராளியாக இணைந்து கொண்டார். புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால பெண் உறுப்பினர்களில் ஒருவர் என்று பெருமையுடன் கூறுகின்றார்.
அரச படையினருடனான போரில் தப்பிப் பிழைத்த சம்பவங்களையும் நினைவு கூருகின்றார். நயோமி ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற்று சிட்னி நகரத்தில் தற்போது சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்கின்றார். இரு குழந்தைகள். பல்கலைக்கழகம் ஒன்றில் கடமை ஆற்றுகின்றார்
|
Geen opmerkingen:
Een reactie posten