தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 juli 2011

யேர்மன் தலைநகரத்தில் சிறீலங்கா தூதரகத்தின் சதி முயற்சி பெர்லின் வாழ் ஈழத்தமிழ் மக்களால் முறியடிப்பு !!!

 
[ திங்கட்கிழமை, 04 யூலை 2011, 08:49.23 AM GMT ]
தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் .....
.....முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் சிறீலங்கா தூதரகம் இன்று யேர்மன் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன்  ஒழுங்குசெய்யப்பட்ட   "அனைத்து இனத்தவர்களின் விழா " என்னும் நிகழ்வை திசை திருப்பி தமக்கு மேலாக வலுப்பெறும் சர்வதேச விமர்சனங்களை முறியடிக்கும் முகமாக ஒரு சில ஈழத்தமிழர் என்றே கூற முடியாத விலைபோன துரோக கும்பல்களை இணைத்து பொய்ப் பிரச்சார நிகழ்வை நடாத்தினார்கள் .
இதை அறிந்து கொண்ட பெர்லின் வாழ் ஈழத்தமிழ் மக்கள் தூதரகத்தின் முன்னர் இன்று காலை 11 மணிக்கு ஒன்றுகூ டி  மாலை 6 மணிவரை சிறீலங்கா தூதரகத்தின் சதி
முயற்சியை முறியடித்தார்கள் . அங்கு வருகை தந்திருந்த யேர்மன் மக்களுக்கு ஈழத்தமிழர்கள் தம் மீது சிறீலங்கா அரசு செய்த இனவழிப்பை ஆவணப்படுத்திய துண்டுபிரசுரங்களை வழங்கியதோடு பிருத்தானிய தொலைகாட்சி வெளியிட்ட சிறீலங்காவின் கொலைக்களம் எனும் காணொளி தட்டையும் வழங்கினார்கள் .
இதை பொறுத்து கொள்ளாத சிறீலங்கா தூதரகத்தின் பணியாளர்களும் இஎலும்புத்துண்டுகளிற்காகவும் இதர சலுகைகளுக்காகவும் அவனது எண்ணத்தை செயல்வடிவமாக்க துணைநிற்கும் தமிழர் என்று கூற முடியாத விலைபோன துரோக கும்பல்களும் கவனயீர்ப்பை நிறுத்துவதுக்கு கடும் முயற்சி எடுத்தார்கள் .
காவல்துறையினரிடம் முறையிட்ட பொழுதும் தோல்வி அடைந்தவர்கள் தமிழர்களின் தேசியக்கொடியை அங்கு இருந்து அகற்றுவதிலும் கடும்  முயற்சி எடுத்தார்கள் .
காவல்துறையும் அவர்களின் அத் திட்டத்துக்கு  துணைபோய் அவர்களுக்கு சார்பாக தேசியக் கொடியை அகற்றும் படி தமிழ் மக்களுக்கு பணித்தார்கள் .
இருந்தும் அனைத்து யேர்மன் சட்டங்களையும் மதித்து  செயல்படும் ஈழத்தமிழர்கள் இறுதி வரை தேசியக் கொடியை தாங்கி நின்றார்கள் . ஈழத்தமிழர்களின் தேசியக்கொடிக்கு யேர்மனியில் எத்தடையும் இல்லாத போதும் சிறீலங்கா ராயதந்திர உறவை பாதிக்க கூடாது  என்று நினைத்த காவல்துறையினரின் கடும் முயற்சியும் தோல்வியடைந்து போனது .இறுதியில் தமது கருத்தில் உறுதி தளராமல் தெளிவாக நின்ற ஈழத்தமிழர்களுக்கு காவல்துறையினரால் தேசியக்கொடியை தொடர்ந்தும் நிகழ்வில் வைத்திருக்கலாம் இ அதற்கு எத்தடையும் இல்லை என்பதைஇ தான் தனக்கு மேல் உள்ள உயரதிகாரியிடம் கேட்டுக்கொண்டதாகவும் என்று அறிவித்தார் .
கவனயீர்ப்பை முறியடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் அங்கு விலை போன துரோக கும்பல்களை அனுப்பி குழப்பம் செய்ய முயற்சித்தார்கள் . இறுதியாக தாம் தமிழ் மக்களை எப்படி  காப்பாற்றினார்கள்  என்று பொய்ப்பிரச்சார படங்களையும் வெளியே வைத்தார்கள் .இயற்கைக்கு  கூட   அவர்களின் பொய்யை தாங்க முடியாமல் வைத்திருந்த அனைத்து கண்ணாடி படங்களையும் விழுத்தி உடைத்தது . முக்கியமாக உலகமே ஒன்றுபட்டு போர்குற்றவாளி என்று சிறிலங்கா அரசை குற்றம்சாட்டி நிற்கையில் மன்னார் முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை இன அழிப்புப் போரை நடாத்திய சிங்களப்படையின் ஒரு பிரிவையே தலைமையேற்று வழிநடாத்திய இராணுவ உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் முன்னிலையில்  ஈழத்தமிழர் என்றே கூற முடியாத விலைபோன மானம் கெட்ட துரோக கும்பல்  சிலர் நாட்டியம் ஆடினார்கள் .
தற்சமயம் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வினில் குறைவான தமிழ் மக்கள் கலந்து கொண்டாலும் எமது தேசியத் தலைவர் காட்டும் வழியில்  நிமிர்ந்து நிற்கும் இளையோர்கள் தொடர்ந்தும் மனம் தளராமல் விடுதலையை நோக்கிய பாதையில் செல்வார்கள் அத்தோடு மிக விரைவில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைத்து தமிழீழ மண்ணுக்காய் தம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் மற்றும் மக்களின்  கனவையும் நியமாக்குவார்கள் என்பது சத்தியம் .
நன்றி
தொடர்புகளுக்கு
சங்கர்
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
(0049 )017621751446

Geen opmerkingen:

Een reactie posten