தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 juli 2011

சந்தர்ப்பவாதி நெடுமாறன் பெயரைச் சொல்லி பணத்தைக் கொள்ளையடிக்கும் இணையம் எது ?

08 July, 2011
இந்திய தமிழரின் தலையில்  மட்டுமல்லாமல் இலங்கைத்தமிழர் தலையிலும் மொட்டையடிக்கும் சந்தர்ப்பவாதி,தமிழர் ஆதரவில்லாவிடினும் கட்சியமைத்து பிரபாகரனை சந்தித்து படம் பிடித்து வித்தைகள் காட்டும் அரசியல்வாதி நெடுமாறனுக்காக பணம் சேர்ப்பதே அவமானம்,அதிலும் இரு இணைய தளங்கள் மேல் சேறு பூசும் அதிர்வின் இத்தகவல் அதிர்வின் தன்மையை அழகாக படம் பிடித்துக்காட்டுகிறது.



முள்ளிவாய்க்கால் நினைவாக சோழன் ஆண்ட தஞ்சையில் ஈகிகள் முற்றம் என்ற நினைவகத்தை ஐயா நெடுமாறன் அவர்களின் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவி வருகிறது. கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நுற்பமான சிற்பக்கலையோடு இந்த ஈகிகள் முற்றம் நிறுவப்பட்டு வரும் நிலையில், அதற்காக பணம் சேர்ப்பதாகக் கூறி ஒரு இணையம் பேப் பால்(paypal) மூலம் காசு சேர்த்துள்ளது. ஆனால் அவ்வாறு தாம் காசைச் சேர்க்கச் சொல்லவில்லை என்றும், இவ்வாறு சேர்க்கப்பட்ட காசு தமக்கு கிடைக்கவில்லை என்றும் ஐயா நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வாறு உலகத் தமிழர் பேரமைப்பிடம் முன் அனுமதி பெறாமல், அவர்களுக்கே தெரியாமல் ஈகிகள் முற்றத்துக்கு காசுசேர்த்த மோசடிப் பேர்வழிகள் யார் என்று தேடினால் கிடைத்த விடை லங்கா சிறி குழுமமும் அதன் தமிழ் வின் என்ற செய்தி இணையமும் ஆகும். சுவிஸில் இருந்து திறக்கப்பட்ட ஒரு அனாமதேய பேப் பால் கணக்கு மூலம் மக்களிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இக் காசு எங்கு சென்றது என்று தெரியவில்லை !

இங்கே ஐயா நெடுமாறன் அவர்கள் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையை நாம் இணைத்துள்ளோம். காசு தமிழ் வின் இணையமூடாகப் பெறப்பட்டது என்பதற்குச் சான்றாக ஸ்கிரீன் ஷாட்டையும் இணைத்துளோம். ஐயா நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை நாம் பிரசுரித்திருப்பதால் இனி இக் காசுக் எங்கே போனது என்ற கேள்விகள் எழு ஆரம்பிக்கும். உடனே நாம் அதனை இவரூடாக இவருக்கு கொடுத்தோம் என தமிழ் வின் இனிகு கூறும். இச் செய்தி பதிவேற்றும் வரை இவர்களால் சேகரிக்கப்பட்ட காசு எங்கே சென்றது என எவருக்கும் தெரியாது. முள்ளிவாய்க்காலில் இறந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு நினைவு முற்றம் கட்டவேண்டும் என தள்ளாடும் வயதில் ஐயா நெடுமாறன் அவர்கள் நினைக்க, அதனைச் சாட்டி புலம்பெயர் தேசங்களில் எவ்வாறு மக்களிடம் பணத்தைக் கொள்ளையடிக்கலாம் எனச் சிலர் சுவிசில் ரூம் போட்டு யோசிக்கிறார்களே , இவர்களா தமிழர்கள் ?

தேசியவாதிகள் போலச் செய்தி எழுதுவதும், பின்னர் மறைமுகமாக இலங்கை அரசையும் அதன் ஒட்டுக் குழுக்களையும் ஆதரிப்பதும், நடந்து வரும் அதே வேளை இது போன்ற ஈனத்தனமான பணத்தாசை பிடித்து அலையும் இணையங்களாக இவர்கள் மாறிவிட்டனர். எதை எதை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது போக, எதைவைத்து பணம் சம்பாதிக்கக்கூடாதோ அதனை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறது இதுபோன்ற இணையங்கள். இச் செய்தியை நாம் வெளியிட்டதால், இனி காசி ஆனந்தன் ஐயாவிடம் பணத்தைக் கொடுத்தோம் இல்லை, நெடுமாறன் ஐயாவோடு இருக்கும் வேறு சிலரிடம் நாம் பணத்தைக் கொடுத்தோம் என்று கூறி இவர்கள் தப்பிக்கவும் முனைவார்கள். எது எப்படி என்றாலும் ஒருவரின் அனுமதி இன்றி அவருக்காக எப்படி பணம் சேர்க்க முடியும் ? இது சட்டப்படி குற்றமும் ஆகும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றது. பழுத்து முதிர்ந்த அரசியல்வாதி என்பதால் அவர் தனது அறிக்கையில் எந்த இணையம் இந்த ஈனத் தனமான காரியத்தைச் செய்தது எனப் பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை. ஆனால் அதுகூடவா தெரியாமல் போய்விடும் ?

அறிக்கையும் ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளது:

நெடுமாறன் ஐயா விடுத்த அறிக்கை !






பின் குறிப்பு: அட்டகாசம் என்னும் ஒரு இணையத்தைப் பாவித்து காசு பெறப்பட்டுள்ளது. அட்டகாசத்தின் முதல் பக்கத்தை இங்கே அழுத்தினால் பார்க்கலாம், பெண்கள் தூங்குவது போலவும், லூட்டி அடிப்பது போலவும் உள்ள அட்டகாசம் என்னும் இணையத்துக்கும் ஈகிகள் முற்றத்திற்கும் என்ன சம்பந்தம் ? காசு கொடுக்கு முன்னர் தமிழர்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லையா ? இவ்வாறு ஒரு இணையத்தில் காசு சேர்க்க தமிழ் வின் உதவியுள்ளது. சாதாரணமாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது, இல்லை ஊர்வலம் நடக்கிறது மக்களே வாருங்கள் என்று செய்தி அனுப்பினால் அதனைப் பிரசுரிக்காத தமிழ் வின் போன்ற இணையம், காசு சேகரிப்பது என்றால் படு மும்மரமாக செய்திகளைப் போட்டு அதனைச் சிறப்புச் செய்தியாக டாப்பில் தூக்கிவிடுவதன் பின்னணியில் என்ன இருக்கும் ? மக்களே சிந்தியுங்கள் !



Geen opmerkingen:

Een reactie posten