தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 juli 2011

வாழ்க்கை மேம்படாவிட்டால் மீண்டும் போருக்கு செல்வேன் - முன்னாள் போராளி

[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 02:13.06 AM GMT ]
வாழ்க்கை மேம்படாவிட்டால், மீண்டும் சண்டையிடப்போவதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்தார். அவரின் இந்தக்கருத்தை நெதர்லாந்து சர்வதேச வானொலி வெளியிட்டுள்ளது.
மற்றும் ஒரு முன்னாள் போராளி தமக்கு யுத்தம் தேவையில்லை ஆனால் தமது பிரதேசத்துக்கு அடிப்படை வசதிகள் தேவை என்று கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கிழக்கின் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளிகளை நெதர்லாந்து சர்வதேச வானொலியின் செய்தியாளர்கள் செவ்வி கண்டுள்ளனர். இதன்போது இந்த கருத்துக்களை அவர்கள் பெற்றுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் இன்னமும் மக்கள் பயத்துடனேயே வாழ்கின்றனர். சிங்களவர்களுக்கு சமமாக அவர்களுக்கு உரிமைகள் தரப்படவில்லை. இந்தநிலையில் தமது எதிர்க்காலம் என்ன என்பது குறித்து சந்தேகம் உள்ளதாக முன்னாள் போராளிப்பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொலிஸார் இன்னும் மாதாமாதம் கவனித்து வருகின்றனர். தமது செயற்பாடுகளை அவதானிக்கின்றனர். தமது வீடுகளை சோதனையிடுகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை தம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளதாக குறித்த முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.
சிங்கள பகுதிகளில் சிங்களம் தெரியாமல் தொழிலை தேடிக்கொள்வது கஸ்டமான காரியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பிரதேசதங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். இந்து மக்கள் வாழ்ந்த இடங்களில் பௌத்த கலாசாரம் திணிக்கப்படுவதாகவும் குறித்த முன்னாள் போராளிகள் நெதர்லாந்து சர்வதேச வானொலி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தமக்கு தமிழ் மொழியான தாய் மொழியில் பேசுவதற்கு கூட மறுக்கப்படுவதாக குறித்த முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten