[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 12:23.48 AM GMT ]
பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த பிரதேச சபை, நகர சபைகளிற்கான உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
தமிழர்களின் கூட்டு உழைப்பின் பெறுபேறாகவே இந்த வெற்றி நோக்கப்படுகிறது.
தீவகப் பகுதிகளிற்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இல்லாத காரணத்தால் கள்ள வாக்குகள் அங்கே தாராளமாக இடப்படும் என்ற அச்சம் தேர்தலிற்கு முன்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே அப்பகுதிகளில் அரசு தரப்பு முன்னிலை வகிக்கிறது.
சிறீலங்கா ஆட்சியலகின் அடிநிலைத் தளமான கிராமிய, நகரசபைக்கான தேர்தலாக இது இருந்த போதும் தமிழர்களின் தலைவர்கள் யார் என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாகவே இந்தத் தேர்தல் அனைவராலும் எதிர்நோக்கப்பட்டதால் இத் தேர்தல் எந்தத் தேர்தலுக்குமேயில்லாத எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.
சிறீலங்கா அரசதரப்புக்கூட தமிழ்த் தேசிய முன்னணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையில், பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், துணைக் குழுத் தலைவர்களான கருணா, டக்ளஸ் மற்றும் பசில் ராஜபக்சா, நாமல் ராஜபக்சா ஆகியோரை யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் களமிறக்கியிருந்தது.
யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் பகிரங்கமாக பணப்பட்டுவாடா, சட்டவிரோத அன்பளிப்புக்கள் என தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்களில் ஈடுபட்டிருந்த அரச தரப்பு “அபிவிருத்தி நிகழ்வுகள்” என்ற பெயரில் விவசாய உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை தேர்தல் காலத்தில் விநியோகத்திருந்தது.
இருந்த போதும் தமிழர்களின் வாக்குப் பலத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாக்கு மோசடிகள் தொடர்பாக அச்சம் வெளியிட்டிருந்தது போலவே தமிழர்களின் தலைமையகமாக இருந்த கிளிநொச்சியில் அரசாங்கம் பலத்த நெருக்குதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்ப் பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், அரச தரப்பு 2 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.
கிளிநொச்சிக்கான மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தாலும் பலத்த போட்டியை அரச தரப்புக் கொடுத்தது போன்ற தோற்றப்பாட்டை வாக்கு விகிதங்கள் வெளிப்படுத்தியுள்ளன. வாக்காளர் அட்டை பறிப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதல்கள் என்பன கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் தினத்தில் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை நகரசபையைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது. அரச தரப்பிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அது பலத்த போட்டியை கொடுத்து 9 ஆசனங்களில் 5 ஆசனங்களைக் கைப்பற்றியது. தமிழர்களின் பிரதேசமாக இருந்து பலவந்தக் குடியேற்றங்களால் சிங்களப் பிரதேசமாக மாறிவரும் குச்சவெளியில் 2 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெற்றுள்ளது. அல்லைக் கந்தளாய் என்ற தமிழ்ப் பிரதேசம் முற்றாக சிங்களப் பிரதேசமாக மாற்றம் பெற்றதால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறையில் உள்ள காரைதீவு மற்றும் திருக்கோவில் பிரதேச சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றியீட்டியுள்ளது. இந்த இரண்டு பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட பிள்ளையானின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு சில நூறு வாக்குக்களை மாத்திரம் பெற்று கட்டுக்காசையும் இழந்துள்ளது. கிழக்கு வாழ் தமிழர்களும் வடக்கு வாழ் தமிழர்களும் ஒரே மக்கள் என்பதை இந்த வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர்.
கூட்டமைப்பின் வெற்றிக்காக கூட்டமைப்பின் புலம்பெயர்ந்த நாடுகளின் கிளைகள் தம்மால் இயன்றளவு பாடுபட்டன. இதுபற்றிக் கூட்டமைப்பின் கனடாக் கிளையின் செயற்பாட்டாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், “மீளக்குடியேறிய மக்களிடம் நிதியோ பணபலமோ இல்லாத நிலையில் அவர்களிற்கு பண, பொருள் ஆசைகளைக் காட்டி அரசு வாக்குக்களைப் பெற முயன்ற போதும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளதானது கூட்டமைப்பின் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது எனத் தெரிவித்தனர்.
கூட்டமைப்பின் கனடாக் கிளையினர் தேர்தல் பிரச்சார நிதியமொன்றை ஏற்படுத்தி சகல மாவட்டங்களிற்கும் தேர்தலிற்கான நிதிப் பங்களிப்பை செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தாயக மக்களின் மீதான அக்கறையான செயற்பாட்டிற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் புலம்பெயர்ந்த கிளை அமைப்புக்களைத் தொடர்பு கொண்டு தமது நன்றியறிதலை மக்களின் சார்பாகத் தெரிவித்திருந்தனர்.

Geen opmerkingen:
Een reactie posten