எவ்விணையம் எச்செய்தி போட்டாலும் எந்த தொலைக்காட்சி எந்நிகழ்ச்சி போட்டாலும் தனது தவிர்ந்தவற்றில் குறைகாண்பதே அதிர்வு!!
11 July, 2011 by admin
அதாவது கொட்டும் மழையிலும், சீரற்ற கால நிலையிலும், குளிர் நாட்களிலும் பெண்களும் இளைஞர்களும் இலங்கை கிரிகெட் அணியைப் புறக்கணியுங்கள் எனத் தொண்டை கிழியக் கத்தினார்களே அது உங்களுக்கு கேட்க்கவில்லையா ? மைதானம் மைதானமாகச் சென்று கால் கடுக்க நின்று துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார்களே அது தெரியாதா ? இல்லை அங்கே நின்ற எம் தமிழ் பெண்கள் மிதும் இளைஞர்கள் மீதும் சிங்களவன் எச்சி துப்பி அவமானப்படுத்தினானே அது தெரியாதா ? இது எல்லாம் தெரிந்திருந்துமா இலங்கை கிரிகெட் அணித் தவலைவர் உரையை நீங்கள் GTV ல் ஒளிபரப்பினீர்கள் ? ஒன்றா இரண்டா இப்படி தொடர்ந்து எத்தனை தவறுகளைச் செய்யப் போகிறீர்கள் ?
இலங்கை கிரிகெட் அணியைப் புறக்கணியுங்கள், என்ற கோஷத்துக்கு எல்ல ஊடகங்களும் ஆதரவு கொடுக்கும்போது அதற்கு கட்டணம் வாங்கி ஒரு விளம்பரமாகப் 40 செகண்டுகள் போட்ட GTV, எவ்வாறு 1 மணித்தியாலமாக இலங்கை கிரிகெட் அணித் தலைவரின் உரையைப் போட்டது ? காசு வாங்கிக் கொண்டு போட்டதா இல்லை காசு வாங்காமல் இலவசமாகப் போட்டதா ? இரண்டில் எது நடந்திருந்தாலும் குற்றம் குற்றமே ! இரவு பகல் பாராது இளையோர்கள் சிந்திய வேர்வையை, அவர்கள் பட்ட அவமானத்தை எல்லாம் அடகுவைத்து தமிழர்களின் மானத்தைக் கப்பல் ஏற்றி நீங்கள் செய்திருக்கும் இந்த ஈனத்தனமான காரியத்தை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.. சனல் 4 தொலைக்காட்சி இதனைச் செய்யவில்லையே ..
ஒரு வேற்றின ஊடகமாம சனல் 4 தொலைக்காட்சி கூட செய்யத் துணியாத காரியத்தை நீங்கள் எவ்வாறு செய்தீர்கள் ? தமிழர்கள் எதைப் போட்டாலும் ஆட்டு மந்தைகள் போலப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் ! திருப்பக் கேள்வி கேட்க்க மாட்டார்கள் ! 2 நாளில் மறந்து விடுவார்கள் இல்லை எனக்கு என்ன என்று சென்றுவிடுவார்கள் அப்படித் தான் நீங்கள் தமிழர்களை நினைத்து வைத்திருக்கிறீர்களா அல்லவா ? விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சொல்லித் திரியும் கணவாண்களே வாருங்கள் ! உங்களுக்கும் ஒரு செய்தியை நான் சொல்லிவிடுகிறேன். GTV இல் உரையாற்றிய இலங்கை அணித் தலைவர் விளையாட்டை மட்டும் கருப்பொருளாகவைத்துப் பேசவில்லை ! மாறாக இலங்கை நல்ல நாடு இப்போது பிரகாசிக்கிறது சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர் என உள்ள புடுக்கு எல்லாத்தையும் தான் சொல்லியுள்ளார்.
இலங்கை அணித் தலைவர் மட்டும் விளையாட்டையும் சுற்றுலாத் துறையையும், விளையாட்டையும் அரசியலையும் கலக்கலாம், ஆனால் தமிழர்களில் சிலர் அன்னப்பறவை ரேஞ்சுக்கு இருப்பார்களாம் ! நாம் கண்டுகொள்ளக்கூடாதாம் ! இது எந்த ஊர் ஞாயம் ஐயா ? போராட்டம் நடக்கிறது என்றால் அதற்கும் கட்டணம் செலுத்தி அறிவிக்கவேண்டி உள்ளது ! தேசிய நினைவு தினங்களுக்கும் கட்டணம் செலுத்தி அறிவிக்கவேண்டி உள்ளது ! போதாக்குறைக்கு ஒரு சிறிய விளம்பரம் ஒன்று GTV ல் வரும் அதுக்கு பெயர்தான் "துயர் பகிர்வோம்" !
மென்மையான சோகக்குரலில் பெண் ஒருவர் சொல்லுவார், உங்கள் உறவுகளின் மரண அறிவித்தலை ஒரு சிறிய கட்டணத்தோடு நாம் உலகிற்கு எடுத்துச் செல்கிறோம் என்று .... அது எவ்வளவு என்று கேட்டால் வாய் பிளக்கும். GTV க்கு அது சிறிய கட்டணம் ! ஆனால் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு அது ஒரு கிழமைச் சம்பளத்துக்கு சமன் ! GTV ஐ அவுஸ்திரேலியாவில் இருந்து இயக்குவது யார் ? இறுதி முடிவு... இறுதி முடிவும் என்கிறார்களே இது ஏன் அவுஸ்திரேலியாவில் இருந்து எடுக்கப்படுகிறது ? விளம்பரம் போட அவுஸ்திரேலியா அனுமதி தேவையில்லை ஆனால் நிகழ்ச்சியில் எதை ஒளிபரப்புவது எதை ஒளிபரப்பக்கூடாது என்பது அவுஸ்திரேலியா தான் தீர்மானிக்குமாம். இந்த அவுஸ்திரேலிய மர்ம நபர்கள் யார் ? இன்னும் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. தமிழர்களே நீங்கள் கேட்டுப் பாருங்களேன் !
தயவுசெய்து உங்கள் கருத்துகளையும் எமக்கு அனுப்பிவையுங்கள் மக்களே !
அதிர்வுக்காக: வல்லிபுரத்தான்
Geen opmerkingen:
Een reactie posten