[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 01:18.18 PM GMT ]
யாழ் மாவட்டத்தில் 46 சதவீதமான வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் பிற்பகல் 4.00 மணிவரை 65 சதவீதமான வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாக யாழ் மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் வாக்களிப்பு மிக அமைதியான முறையில் நடைபெற்றிருப்பதாக தெரிவித்திருக்கும் அதேவேளை, வாக்களிப்பு தினமான இன்று சனிக்கிழமை இதுவரை 60 தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் 45 வீதமான வாக்குப்பதிவும் கரைச்சி பிரதேச சபையில் 65 வீதமான வாக்குப்பதிவும் பூநகரி பிரதேச சபையில் வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசசபைக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை ஆகியவற்றுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சுமூகமான முறையில் நடைபெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூறினர்.
அத்துடன் வாக்கெடுப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மாவட்டச்செயலகங்களுக்கு பஸ்களில் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும், தற்போது தபால் மூலமான வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:
Een reactie posten