இலங்கைப் படையினருக்கு எதிராக செனல் 4 ஒளிபரப்பிய காணொளி தொடர்பில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சென்ற தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கண்டியை சேர்ந்த கந்தவனம் ஜெகதீஸ்வரன் என்பவரே கடந்த 4 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை இன்று இலங்கையின் குற்றப் புலனாய்வுத்துறையினர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
இதன்போது குறித்த நபர் இலங்கையின் படையினருக்கு எதிராக பொய்யான தகவல்களை செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கண்டியை சேர்ந்த தமிழரை தாம் கைது செய்ததாகவும் குற்றப்புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டனர்
செனல் 4 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்காவின் கொலைக்களம் காணொளியை ஒளிபரப்பியது.
இதனை பார்வையிட்ட கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் லண்டனில் உள்ள தமது உறவினர்கள் மூலம் கண்டியை சேர்ந்த கைது செய்யப்பட்ட தமிழர் குறித்து தகவல்களை பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்தே அவர் தமக்கு சந்தேகநபர் குறித்த தகவலை வழங்கியதாக குற்றப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர், கடந்த மாதமே லண்டனில் இருந்து இலங்கை திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:
Een reactie posten