யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நினைவுநாள் நிகழ்வுகள் இன்று (05-07-2011) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன.
கரும்புலிகள் நாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும், குறித்த இடமொன்றில் கூடிய பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினர் தமக்காக தற்கொடை புரிந்த கரும்புலிகளை நெஞ்சில் நினைவேந்தி வணக்கம் செலுத்தினர்.
‘தரையிலும், கடலிலும், ஏன் வானிலும் கூட எதிரியை கலங்க வைத்து. எம் தேச விடுதலைக்கு தம் உயிரை ஆயுதமாக்கிய தற்கொடையாளர்களை இந்நாளில் அனைவரும் நினைவு கூறுவோம்’ என்ற வரிகள் எழுதப்பட்ட கரும்புலிகளைக் குறிக்கும் படங்களை வைத்து, மெழுகுதிரி கொழுத்தி மாணவர்கள் தமது இதய வணக்கத்தைக் காணிக்கை ஆக்கினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வு பற்றிக் குறிப்பிட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், தமிழ் மக்கள் மீது எந்தவித அடக்குமறையைப் பிரயோகித்தாலும், அல்லது சலுகைகளை முன்வைத்தாலும், தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நினைவுகளை யாராலும்; அழித்துவிட முடியாது எனவும், விடுதலை வேணவா இன்னும் மனங்களில் பற்றி எரிந்துகொண்டு இருப்பதற்கு இவ்வாறான நிகழ்வுகளே சாட்சி பகருகின்றன எனவும் தெரிவித்தார். |
Geen opmerkingen:
Een reactie posten