நோர்வேயில் தொழிற்கட்சி முகாமுக்காக இளைஞர்கள் கூடியிருந்த குட்டித் தீவு ஒன்றில் நோர்வே நாட்டை சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் சராமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஒஸ்லோவின் அருகே உடொயா என்ற இந்த சிறு தீவில் இளைஞர்களுக்கான தொழிற்கட்சியின் கோடை முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொலிஸ்காரர் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவரே சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
ஒஸ்லோவின் மையப் பகுதியில் பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு முன்பாகவும் பொற்றோலிய அமைச்சுக்கு முன்பாகவும் நடாத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 7 பேரை பலிகொண்ட ஒரு குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் 32 வயதுடைய அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டுக்குள் நோர்வே பொலிசார் சோதனையும் நடத்தியுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை சமூகவலைத்தளங்கள் பலவற்றிலும் கொலையாளி எழுதி வைத்ததுவிட்டு தாக்குதலை நடாத்தியுள்ளார். அதுவும் இந்தத் தகவல்கள் ஒரு சில நாட்களுக்கு முன்பே சேர்க்கப்பட்டவையாக அமைந்துள்ளன.
பிரெவிக் பற்றிய இணையப் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை உடையவர் என்று குறிப்புணர்த்துவதாக பொலிசார் கூறுகின்றனர். ஆனாலும் தனது நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் முன்னுதாரணமாக காட்டி உள்ளார்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயத்தையும் தமிழர்களின் வளர்ச்சியையும் ஒப்புவித்து தனது தாக்குதலை நடாத்தியுள்ளார். அவருடைய 1500 பக்க தாக்குதல் திட்டத்தில் மலேசியாவில் உள்ள தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் முன்னுதாரணமாக காட்டி உள்ளார்.
மலேசியாவில் முஸ்லீம்கள் அரசை ஆளுவதாகவும் அங்கு இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவதையும் இந்திய தமிழர்கள் படும் துன்பங்களை முஸ்லீம் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டங்களையே தான் எதிர்கால முஸ்லீம்களுக்கெதிரான யுத்த மூலோபாயமாக காட்டியுள்ளார். நான்காவது சந்ததிக்கான யுத்தம் பொதுவாக நாடற்றவர்கள் தமது தேசத்தை அமைத்துக் கொள்வதற்கான போராட்டமாக அவர் தனது தாக்குதலை வகைபடுத்தியுள்ளார்.
தனது அமைப்பு மேற்கொள்ளும் யுத்தம் மனித வலுவை பயன்படுத்தி மலேசியாவில் உள்ள தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தும் போராட்டம் போன்று (கஸ்பொல்லா அமைப்பு) தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு நவீன ஆதாரம் என்று அவர் எழுதி வைத்துள்ளார்.
நான்காவது சந்ததிக்கான யுத்தம் 03 படிமுறைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை போன்று முன்னகர்த்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். முதலாவதாக புலிகளை போன்று மனித வலுவை வைத்து போராடுதல், மனோதத்துவ ரீதியில் போரிடுதல், ஆதரவு சக்திகளை உருவாக்கி போரிடுதல் என்று விடுதலைப் புலிகளை முன்னுதாரணமாக காட்டி உள்ளார்.
யுத்தத்தினை வன்முறைகள் அற்ற விதத்தில் காந்தியை போலவும் போராட வேண்டும் என தெரிவித்துள்ள அவர் தனது படைகள் எதிர்காலத்தில் மகாத்மா காந்தி பிரித்தானிய சாம்ராச்சியத்திற்கு எதிராக போரிட்ட மாதிரி போரிட வேண்டும் என தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் அவர் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில், தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் மரபு பேணுபவர் என்றும் அவர் வர்ணித்துள்ளார். பிரெவிக் ஒஸ்லோவில் வளர்ந்தவராகத் தெரிகிறார்.
பின்னர் இவர் நகரத்திலிருந்து வெளியேறி பிரெவிக் ஜியோபார்ம் என்ற ஒரு விவசாய நிறுவனத்தை ஆரம்பித்திருந்ததாகத் தெரிகிறது. இவர் சில வருடங்கள் முன்புதான் வலது சாரி தீவிரவாதக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாரென்று இவரது நண்பர் ஒருவர் கூறுவதாக வெர்டென்ஸ் கங் என்ற நோர்வே செய்தித்தாள் தெரிவிக்கிறது.
நடந்த தாக்குதல்கள் 'கொடூர கனவுபோல இருக்கிறது' என நோர்வே பிரதமர் ஜென் ஸ்டொல்டன்பர்க் கூறியுள்ளார். ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகமும் சேதமடைந்திருந்தது. இவ்வெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர்.
|
Geen opmerkingen:
Een reactie posten