யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு முன்னாள் யுவதி ஒருவரை இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி தீ மூட்டி கொளுத்தியுள்ளார்.
பாடசாலையில் கல்வி கற்கும் உறவினரின் பிள்ளையை அழைத்து வருவதற்காக இன்று பிற்பகல் 2.10 மணியளவில் பாடசாலைக்கு குறித்த யுவதி சென்றுள்ளார். இதன் போது அங்கு வந்த இளைஞன் அருகில் இருந்த கடையில் உள்ள கத்தியை எடுத்து யுவதியின் வயிற்றில் குத்தியுள்ளதோடு கழுத்தையும் அறுத்துள்ளார்.
இதனையடுத்து நிலத்தில் வீழ்ந்த யுவதியை தான் கொண்டு வந்த பெற்றோலை ஊற்றி தீயிட்டு கொழுத்தி தானும் அந்த உடல் மீது வீழ்ந்து எறிந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
(இரண்டாவது இணைப்பு)
யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று பட்டப் பகலில் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். 28 வயதான சுதாகரன் அகிலா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பெண்ணை எரியூட்ட முற்பட்ட போது சந்தேக நபரான என்.சத்தியன் என்பவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது யாழ். போதனா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் யாழில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றில் முகாமையாளராக கடமையாற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவன் அரபு நாடொன்றில் பணிபுரிவதாகவும் கூறப்படுகின்றது.

Geen opmerkingen:
Een reactie posten