தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 maart 2012

வடக்கு கிழக்கில் பொலிஸ் சேவைக்கு 1600 தமிழர்கள் இணைக்கப்படுவர்! அகாஷியிடம் கோத்தபாய தெரிவிப்பு!


வடக்கு கிழக்கில் பணியாற்றுவதற்காக சுமார் 1600 தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1600 தமிழர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளதாக ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியுடனான சந்திப்பின்போது கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக்ச தற்போது டோக்கியோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்ததாகவும் டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் வெளிநாடுகளிலிருந்து சுமார் 20,000 தமிழர்கள் தமது குடும்பத்தினர் உறவினரை சந்திப்பதற்காக வடக்கு கிழக்கிற்கு வந்ததாகவும் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 5000 பேர் திரும்பி வந்ததாகவும் கோத்தபாய ராஜபக்ச யசூசி அகாசியிடம் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten