தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 maart 2012

நான் இனப்படுகொலையின் சாட்சி: ஆவணப்படத்துக்கு விருது !


இந்தியாவின் மிகப்பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஹெட்லைன் ருடே(Headline Today's ), சிறந்த ஆவணப்படத்துக்காக விருதை அறிவித்துள்ளது. முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நான் இனப்படுகொலைகளின் சாட்சி என்ற ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் இப் பரிசை தட்டிச்சென்றார். பிரியமெளதா என்னும் ஊடகவியலாளர், இரகசியமாக இலங்கைக்குச் சென்று, பல இடங்களில் தமிழர்களை சந்தித்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என ஈழத் தமிழ்ப்பெண்கள் அல்லலுறுவதை இவர் திறம்பட ஆவணப்படமாக்கியுள்ளார்.

இவரின் துணிச்சல் மிக்க செயலுக்கே இந்த விருது வழங்கப்பட்டதாக ஹெட்லைன் ருடே தொலைக்காட்சி அறிவித்துள்ளது. சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட கொலைக்களங்களுக்கு நிகராக இந்த ஆவணப்படம் அமைந்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்த ஆவணப்படத்தை அதிர்வு இணையம் விரைவில் வெளியிடவுள்ளது.




Geen opmerkingen:

Een reactie posten